தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய, மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக மணிப்பூரில் மெய்டெய், நாகா பழங்குடியின மக்கள் பேரணி!

1 Nov 2026, 9:46 pm
ஒன்றிய, மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக மணிப்பூரில் மெய்டெய், நாகா பழங்குடியின மக்கள் பேரணி!

ஒன்றிய, மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக மணிப்பூரில் மெய்டெய், நாகா பழங்குடியின மக்கள் பேரணி!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் 2023ஆம் ஆண்டு முதல், நீதிமன்ற உத்தரவு காரணமாகக் குக்கி - மெய்டெய் இனக்குழுக்களுக்கு இடையேயான மோதல், இன்று வரை வன் முறைச் சம்பவங்களாக நீடிக்கிறது.

3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த வன்முறைச் சம்பவங்களால் 300-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; பல லட்சக்கணக்கானோர் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்துவருகின்றனர். மாநிலத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால், பாஜக ஆட்சியைக் கவிழ்த்துக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மீண்டும் பாஜக அரசு அமைக்கப் பட்ட பின்பும் மணிப்பூரில் வன் முறைச்சம்பவங்கள் கொஞ்சம் கூட குறையவில்லை.

மாபெரும் பேரணிஇந்நிலையில், ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக மணிப்பூரில் சனிக்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது. சொந்த மண்ணைச் சேர்ந்த பூர்வகுடி சமூகங்களைப் பாதுகாக்கத் தவறிய மணிப்பூர் அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்; குக்கி தீவிரவாதக் குழுக்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்; அசாம் ரைபிள்ஸ் படையை வாபஸ் பெற வேண்டும் மற்றும் 1951-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு என்.ஆர்.சி. (NRC) திட்டத்தைச் செயல்படுத்த வேண் டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

‘மணிப்பூர் ஒருமைப்பாட்டுக் கான ஒருங்கிணைப்புக் குழு’ மற்றும் பல்வேறு நாகா பழங்குடி அமைப்புகளும் மெய்டெய் அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த மாபெரும் பேரணிகள் இம் பால், சேனாபதி மற்றும் சந்தேல் ஆகிய இடங்களில் நடைபெற்றன.பேரணியில் “மணிப்பூர் பாஜக அரசு பதவி விலக வேண்டும்”, “மோடி அரசுக்கு நாங்கள் விடுக் கும் இறுதிஎச்சரிக்கை”, “துணை முதலமைச்சர் நெம்சங் கிப்கெனை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்” உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியும், சேனாபதி மற்றும் சந்தேல் ஆகிய மலைப் பகுதிகளிலும் பிரம்மாண்ட ஆர்ப் பாட்டங்களும் நடைபெற்றன.

வீடுகளுக்குள் முடங்கிய பாஜக தலைவர்கள்இந்தப் பேரணி காரணமாக மணிப்பூர் பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பொது இடங்களில் தலைகாட்டவில்லை. அவர்கள் வீடுகளிலிலும், அரசு இல்லங்களிலும், தலைமைச் செயலகத்திலுமே தங்கிவிட்டனர். பேரணியின் போது மக்கள் தங்களைத் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் பாஜக தலைவர்கள் முடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வன்முறை: குக்கி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலத்தின் நோனி மாவட்டத்தில் அமைந்துள்ள கேக்ரு நாகா கிராமத்தில் சனிக்கிழமை பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மலைக்காடுகள் நிறைந்த இந்த கிராமத்தில் பல மணி நேரமாக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சுராசந்த்பூர், ஹெங்லெப் மற்றும் தாண்லோன் பகுதிகளைச் சேர்ந்த தாங்லென்சாங் சிங்சன், தாங்கோசெய் ஹாக்கிப், லாம்மின்சாங் கிப்கென் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த 3 பேரும் கிராமப் பாதுகாப்பு தன்னார்வலர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.