ஒரே வாரத்தில் 2ஆவது முறை : பாஜகவிற்கு எதிராக மணிப்பூரில் மீண்டும் பேரணி
1 hour before

ஒரே வாரத்தில் 2ஆவது முறை : பாஜகவிற்கு எதிராக மணிப்பூரில் மீண்டும் பேரணி

இம்பால்மணிப்பூர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், 2023-2024 ஆண்டுகளில் நிகழ்ந்தது போல மீண்டும்வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும்15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மோடி அரசின்ஒப்பந்தமே காரணம்குக்கி ஆயுதம் ஏந்திய அமைப்புகள் நடத்திய தாக்குதல் தான் வன்முறைக்கு காரணம் என்றும், ஒன்றிய அரசுகுக்கி ஆயுதம் ஏந்திய அமைப்பு களோடு மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு பின்பே வன்முறை சம்பவங்கள் மீண்டும்அதிகரித்து இருப்பதாக மெய்டெய் மற்றும் நாகா சமூகங்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டின. குறிப்பாக அக். 31அன்று மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணை ப்புக் குழு மற்றும் பல்வேறு நாகா பழங்குடி அமைப்புகளும் மெய்டெய் அமைப்புகளும் இணைந்து இம்பால், சேனாபதி மற்றும் சந்தேல் ஆகிய இடங்களில் பேரணி நடத்தின. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பேரணியில் ‘மோடி அரசு மற்றும் மணிப்பூர் பாஜக அரசுக்கு’ எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாகா மக்கள் : தொடர்ந்து வியாழமணிப்பூரில் உள்ள நாகா அமைப்புகள் உக்ரூல் மற்றும் காம்ஜோங் மாவட்டத் தலைமையகங்களில் பேரணிகளை நடத்தின. ‘தங்குல் நாகா லாங்’ மற்றும்‘ஐக்கிய நாகா கவுன்சில்’ அமைப்புகள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பேரணியின் போது தங்குல் நாகா லாங் தலைவர் ஸ்வார்ட் வாசும்செய்தியாளர்களிடம் பேசுகையில், “மணிப்பூர் மாநிலத்தில் வெறும் 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய முடியாத பாஜக அரசின் திறமையின்மை கவலை அளிக்கிறது. இது அவமானப்பட வேண்டிய விஷயம். ஒன்றிய அரசிடம் மனு அளித்தால், அதனை மனுவாக படித்துவிட்டு கண்டுகொள்ள மாட்டார்கள். இதனால் போராட்டத்துக்கு இடையே மீண்டும்ஒன்றிய அரசிடம் மனு அளித்துள் ளோம். இதனை மனுவாக நினைத் தால் மணிப்பூரில் போராட்டம் தீவிரமடையும்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.