பாஜக ஆளும் மணிப்பூரில் 45 ஏக்கர் சட்டவிரோத கசகசா சாகுபடி!
yesterday

பாஜக ஆளும் மணிப்பூரில் 45 ஏக்கர் சட்டவிரோத கசகசா சாகுபடி!

இம்பால்பாஜக ஆளும் மணிப்பூரின்சுராசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்45 ஏக்கர் பரப்பளவிலான சட்டவிரோத கசகசா (Poppy) சாகுபடியை அழித்துள்ளதாக அம்மாநில காவல்துறை சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பான அறிக்கையில், “சுராசந்த்பூர் மாவட்டத்தின் தாங்ஜிங் மலைத்தொடரில் காவல்துறை, மத்திய பாதுகாப்புப் படை மற்றும் வனத்துறை ஆகியவைஇணைந்த கூட்டுக்குழு இந்தச் சட்டவிரோதச் சாகுபடியை அழித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது சம்பவ இடத்தில் யாரும் இருக்கவில்லை. ஆனால் லாங்னான் கிராமத் தலைவருக்கு உடனடியாகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.கசகசா - போதைப்பொருள்கசகசா சமையல் பொருள் தான் என்றாலும், அதன் பூக்கள் பூத்து, விதைக்

கூடு காய்க்கும் போது, அந்தப் பச்சையான காயில் கீறல் போட்டால் ஒருவித பால் போன்ற திரவம் சுரக்கும். அந்த பாலைச் சேகரித்து உலர்த்தினால் கிடைக்கக் கூடியதுதான் அபினி எனப்படும் போதைப்பொருள். இதிலிருந்துதான் ஹெராயின், மார்பின் போன்ற சக்திவாய்ந்த போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவேதான், அரசின் உரிய உரிமம் இன்றி கசகசாசெடிகளை வளர்ப்பது இந்தியாவில் போதைப்ப்பொருள் தடுப்புச் சட்டம் படி கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.