மணிப்பூரின் மலை மாவட்டங்களில் தீவிர வன்முறை-பதற்றம்
yesterday

மணிப்பூரின் மலை மாவட்டங்களில் தீவிர வன்முறை-பதற்றம்

பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் வன்முறை சம்பவங்கள், தற்போது மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. 3 நாட்களுக்கு முன் சேனாபதி மாவட்டத்தில் குக்கி பழங்குடியினப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். நாகா கும்பல்தான் இந்த படுகொலையை அரங்கேற்றியது என குக்கி - ஜோ கவுன் சில் குற்றம்சாட்டியது. மேலும் குக்கி - ஜோ பழங்குடியின அமைப்புகள் மணிப்பூரில் வெள்ளிக்கிழமை முதல் 48 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்தைநடத் தின. மலை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து உக்ரூல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த துப் பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உக்ரூல் மாவட்டத்தின் நியூ ஹெவன் கிராமத்திற்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ் சாலை 202இல் சென்று கொண்டிருந்த 2 வாகனங்கள் மீது அடையாளம்தெரியாத ஆயுதம் தாங்கிய கும்பல் துப்பாக் கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் சாங்சாக் மற்றும் தசார் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர். 4 பேரும் நாகா இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குக்கி - நாகா இடையே வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், உக்ரூல் சம்பவத்தில் குக்கி ஆயு

தம் தாங்கிய கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் குக்கி பழங்குடி அமைப்புகள் இந்த குற்றச்சாட்டை மறுத்து, முறையான விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளன. சேனாபதி, உக்ரூல் மாவட்டங்களில் தொடர்ச்சியாக வன் முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் மலை மாவட்டங்களில் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது.