மணிப்பூர்: கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் உயிரிழப்பு
18 Jan 2026, 4:50 pm
<p><strong>மணிப்பூர்: கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் உயிரிழப்பு</strong></p>
<p>இம்பால் பாஜகவின் வகுப்புவாத அரசியலால் மணிப் பூர் மாநிலம் 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் வன்முறை யால் பற்றி எரிந்து கொண்டிருக்கி றது. பாஜக ஆட்சியை கவிழ்ந்தும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியும் மணிப்பூரில் இன்னும் வன்முறை சம்பவங் கள் கட்டுக்குள் வரவில்லை. ஊட கங்கள் கட்டுப்படுத்தப்பட்டதால் வன்முறை சம்பவங்கள் தொடர் பான செய்திகள் மறைக்கப்படு கின்றன என்ற நாள்பட்ட குற்றச் சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், மணிப்பூர் இனக்கலவரத்தின் போது கடத் தப்பட்டு கும்பல் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஜனவரி 10 அன்று உயிரிழந்தார். 2023ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி, இம்பாலில் உள்ள நியூ செக்கோன் பகுதி யில் இளம்பெண் பெண் கடத்தப் பட்டார். வன்முறையில் ஈடுபட்டு இருந்த ஒரு கும்பல் இளம் பெண்ணை பல இடங்களில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளா க்கியது. படுகாயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை ஒரு ஆட்டோ ஓட்டுநர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். வன்கொடுமையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரண மாகத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், இறுதி யில் கடந்த ஜனவரி 10 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒருவர் கூட கைது இல்லை இந்த கும்பல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 2023 ஜூலை மாதம் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டு, வழக்கு சிபிஐ வசம் ஒப்ப டைக்கப்பட்டது. ஆனால், வழக்குத் தொடங்கி 2 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஒருவரைக் கூட சிபிஐ கைது செய்யவில்லை. இந்நிலையில், ஊடகம் ஒன் றிற்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பேசுகையில்,”இந்த கொடூ ரமான குற்றத்திற்கு ஆளாகு வதற்கு முன்பு என் மகள் மிக வும் துடிப்பான மற்றும் வெளிப்ப டையான பெண்ணாக இருந்தார். அவள் எங்கள் உறவினர் ஒருவரு டன் இம்பாலில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை செய்தார். அவளுக்கு பல நண்பர்கள் இருந் தனர். அவர்களுடன் அடிக்கடி மகிழ்ச்சியாக ஊர் சுற்றுவார். என் மகள் எப்போதும் புன்னகையுடன், உயிர்ப்புடன் இருப்பார். ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவள் புன்னகையை இழந்துவிட் டாள்” என்றார். போராட்டம் பெண்ணின் மரணத்திற்கு குக்கி சமூக அமைப்புகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளன. பெண் ணுக்கு நீதி கிடைக்க மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி னர். குற்றவாளிகள் இன்னும் சுதந்தி ரமாகத் திரியும் நிலையில், பாதிக் கப்பட்ட பெண் நீதிக்காகக் காத்தி ருந்தே உயிர் நீத்துள்ளது மணிப்பூர் மக்கள் மத்தியில் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
