ஐயா வைகுண்டருக்கு திருவனந்தபுரத்தில் மணிமண்டபம்! கேரள அரசுக்கு சிபிஎம் பாராட்டு!!
3 Mar 2026, 3:38 pm
<p><strong>ஐயா வைகுண்டருக்கு திருவனந்தபுரத்தில் மணிமண்டபம்! கேரள அரசுக்கு சிபிஎம் பாராட்டு!!</strong></p>
<p>சென்னை, மார்ச் 3 - ஐயா வைகுண்ட ருக்கு திருவனந்தபுரத் தில் மணி மண்டபம் அமைக்கும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான சமூக சீர்திருத்தம் கன்னியாகுமரி மாவட்டம் கடந்த காலத் தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சொல்லொண்ணா வகையில் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந் தனர். இதன் காரணமாகவே, சுவாமி விவே கானந்தர் அதை ‘பைத்தியக்காரர்களின் தேசம்’ என அழைத்தார். இத்தகைய சூழ்நிலை யில் ஐயா வைகுண்டர் எடுத்த சமூக சீர்திருத்தப் போராட்டங்களும் முயற்சிகளும் கேரளத்தின் முற்போக்கு செயல்பாடுகளுக்கு முன்னோடியாக அமைந்திருந்தது. தீண்டாமை, அணுகாமை, காணாமை என்று மிகவும் பிற்போக்கான ஒடுக்குமுறை களுக்கு எதிராக ஐயா வைகுண்டர் மிகப்பெ ரிய கருத்துப்போரை நிகழ்த்தியவர். இன்றைய தலைமுறை அறியவேண்டியது அவசியம் இந்நிலையில், அவரது சமூக சீர்திருத்த மேம்பாட்டிற்கான பங்களிப்பை நினைவு கூரும் வகையிலும், அவர் கடந்து வந்த பாதையை இன்றைய தலைமுறையினருக்கு நினைவூட்டி முன்னேறிச் செல்வதற்காக ஐயா வைகுண்டரின் பணிகளைக் காட்சிப் படுத்தும் வகையில், அவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் கேரள இடது முன்னணி அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 28.02.2026 அன்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஐயா வைகுண்டர் நினைவு மண்டபத்திற் கான அடிக்கல்லை நாட்டியிருக்கிறார். சமூக சீர்திருத்த வரலாற்றை முன்னெ டுத்துச் செல்லும் வகையிலான கேரள அரசின் இந்த முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வர வேற்கிறது, பாராட்டுகிறது. கேரள முதல மைச்சர் பினராயி விஜயனுக்கும், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் நன்றி யினைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.</p>
<p> </p>
