தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை விவகாரம் டி.கே.சிவக்குமார் தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்

25 May 2026, 10:17 pm
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை விவகாரம் டி.கே.சிவக்குமார் தனது அரசியல்  நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்
<p><strong>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை விவகாரம் டி.கே.சிவக்குமார் தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்</strong></p><p>காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு விருதுநகர், மே 26- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு, விருதுநகர் மக்க ளவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் செய்தியாளர்களை சந் தித்த அவர், “காவிரி நீர் விவகாரம் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை. தமிழ்நாட்டின் உரிமையை காங்கிரஸ் கட்சி எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காது. டி.கே.சிவக்குமார் தனது அரசியல் நோக்கத்திற் காக காவிரி விவகா ரத்தை பயன்படுத்துகிறார். இதை வன்மை யாகக் கண்டிக்கிறேன்” என்றார். மேலும், “மேகதாது அணை விவகா ரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமான நட வடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இதுகுறித்து உச்சநீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை மற்றும் அரசின் வாதங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்” என்றும் தெரி வித்தார். அதேபோல், சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் ‘கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி’ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வேலையின்மை, விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காதது, சிறு தொழில்களின் வீழ்ச்சி போன்ற பொருளா தார பிரச்சனைகளால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த டிரெண்ட்” என்றார். மேலும், “ஒன்றிய அரசு பெரும் பணக்கா ரர்களுக்கான அரசாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு மக்களிடையே உரு வாகியுள்ளது. சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும், மக்களின் கோபத்தை அடக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.