ராமருக்கே அல்வா கொடுத்தவர்கள் பாஜகவினர்
24 Jun 2026, 12:57 am

ராமருக்கே அல்வா கொடுத்தவர்கள் பாஜகவினர்

மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சனம்

விருதுநகர், ஜூன் 23- உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர் களிடமிருந்து பெறப்பட்ட நிதியை முறை யாக பயன்படுத்தாமல், “ராமருக்கே அல்வா கொடுத்தவர்கள் பாஜகவினர்” என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக் கம் தாகூர் கடுமையாக விமர்சித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந் தித்த அவர், ராமர் கோவில் நிதி தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இது ஒரு “விஞ்ஞான ஊழல்” எனவும் குற் றம்சாட்டினார். இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் நடைபெற்று வருவ தாகவும், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனையை எழுப்பும் என்றும் தெரிவித்தார். மேலும், விருதுநகர் மற்றும் இராம நாதபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங் களை “முன்னேறத் துடிக்கும் மாவட்டங் கள்” என ஒன்றிய அரசு அறிவித்திருந்தா லும், அதற்கான சிறப்பு நிதி எதுவும் ஒதுக் கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டி னார். இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பலமுறை கேள்வி எழுப்பியபோதும், முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், நாட்டில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையங்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்க ளிடமிருந்து பெருமளவில் கட்டணம் வசூ லிப்பதாக குற்றம்சாட்டினார். அந்த மையங் கள் பல மாநில அரசுகளின் கல்வி பட் ஜெட்டை விட அதிக வருவாய் ஈட்டுவதாக வும், இது மாணவர்களுக்கும் பெற்றோர் களுக்கும் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர் களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.