முந்தய பக்கம்

தேர்வு மோசடியை டிஜிட்டல் மயமாக்கிய பாஜக: மாணிக்கம் தாகூர்

12 Jul 2026, 9:53 pm
தேர்வு மோசடியை டிஜிட்டல் மயமாக்கிய பாஜக: மாணிக்கம் தாகூர்
<p><strong>தேர்வு மோசடியை டிஜிட்டல் மயமாக்கிய பாஜக: மாணிக்கம் தாகூர்</strong></p><p>சென்னை, ஜூலை 12 - ஒன்றிய பாஜக அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்பது புளுகு மூட்டை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் (X) தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். கல்வி முறையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தேர்வு மோசடித் தொழிற்சாலையையே பாஜக அரசு டிஜிட்டல் மயமாக்கியுள்ளது என்று சாடியுள்ள அவர், 2015-க்குப் பிறகு கேள்வித்தாள் கசிவு 70 சதவீதமாக உயர்ந்துள்ளதால் மாணவர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றார். பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் 100-க்கும் மேற்பட்ட தேர்வு மோசடிகள் நடந்துள்ளன. பில்லியன் டாலர் கோச்சிங் சென்டர்களும், அதிகாரிகளும் மட்டுமே இதனால் பணக்காரர்கள் ஆகிறார்கள்; மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram