ஏப்.23 ஊதியத்துடன் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும்
9 Apr 2026, 5:30 am

ஏப்.23 ஊதியத்துடன் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும்

சென்னை, ஏப். 8- தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.23 அன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்காவிடில் நடவடிக்கை பாயும் என்று தொழிலாளர் ஆணையர் எச்சரித்துள்ளார். நிறுவனங்கள், கடை மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், வியாபாரிகள் சங்கங்கள் ஆகியோரைச் சுட்டிக் காட்டி புதனன்று (ஏப்.8) அண்ணாநகர் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை யொட்டி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்.23 அன்று நடைபெறுகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135(பி)-ன் படி அனைத்துவகையான தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்று பணிபுரியும் தொழிலாளர்கள், தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏப்.23 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

விடுப்பு அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் செய்ய மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரமேஷ் கைபேசி எண்களில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.