மானாமதுரையில் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொள்ளை
4 Jul 2026, 9:38 pm
<p><strong>மானாமதுரையில் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொள்ளை</strong></p><p>மானாமதுரை, ஜூலை 4- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து, சுமார் 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஓய்வுபெற்ற ஊழியர் பாண்டி, கடந்த ஒரு வாரமாக மதுரையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், சனிக்கிழமை வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த சுமார் 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரு வாரமாக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்த நிலையில் இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
