மானாமதுரை ஆகாஷ் காவல் படுகொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு
13 Mar 2026, 4:52 pm
<p><strong>மானாமதுரை ஆகாஷ் காவல் படுகொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு</strong></p>
<p>சென்னை, மார்ச் 13 - சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பட்டிய லின இளைஞர் ஆகாஷ் டெலிசன் மானாமதுரை காவல்துறையினரின் சித்ரவதைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலைக்கு நீதி கேட்டு போராட் டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் உதவியுடன், ஆகாசின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசா ரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் நீதித்துறை நடுவரிடம் ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தில், காவல்துறையினர் தனது காலை அடித்து உடைத்தது உள்பட தன்மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை வாக்குமூல மாகப் பதிவு செய்துள்ளார் என்பதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு எதிரான இவ்வழக்கை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத் தின்கீழ் பதிவு செய்திடவும் உயர்நீதிமன்ற உத்தர வில் குறிப்பிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வர வேற்கிறது. இதன் அடிப்படையில் முழுமையான விசாரணையும், உறுதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறது. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி கிடைக்க வேண்டிய சட்ட உதவிகளையும், நிவாரண உரிமைகளையும் உடனடியாக உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அனைத்து வகைகளிலும் முன்னணி உடனி ருக்கும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.</p>
<p> </p>
