மானாமதுரையில் காவல்துறை தாக்குதலில் பலியான சம்பவம் 100 நாட்களுக்குப் பிறகு ஆகாஷ் உடல் தகனம்
17 Jun 2026, 9:29 pm

மானாமதுரையில் காவல்துறை தாக்குதலில் பலியான சம்பவம் 100 நாட்களுக்குப் பிறகு ஆகாஷ் உடல் தகனம்

மதுரை, ஜூன் 18- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் (24) என்பவரின் உடல், உயிரிழந்து 100 நாட்களுக்குப் பிறகு அதி காரிகளிடம் ஒப்படைக்கப் பட்டு, பெற்றோர் முன்னிலை யில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு தகனம் செய் யப்பட்டது.

மானாமதுரை பகுதி யில் நடைபெற்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப் பட்ட ஆகாஷ், காவல்துறை யினர் தாக்கியதால் கால் எலும்பு முறிந்ததாக கூறப் படுகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில், கடந்த மார்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தார். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்பு டைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து, ஆகாஷின் உறவினர்கள் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்ட னர்.

இதனால் அவரது உடல் அரசு மருத்துவமனை பிண வறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உடல் 100 நாட்களுக்கும் மேலாக பிணவறையில் இருப்பது தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, உடலை உட னடியாக பெற்றுக் கொள்ள பெற்றோருக்கு உத்தரவிட் டது. அவ்வாறு மறுத்தால் மாவட்ட நிர்வாகம் உடலை பெற்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து ஆகா ஷின் பெற்றோர் மற்றும் உற வினர்கள் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்த தாக காவல்துறைக்கு தக வல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் புதன் கிழமை காலை உடலை ஒப்ப டைக்கும் பணிகள் தொடங் கின. பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அரசு ராஜாஜி மருத்துவ மனை பிணவறை முன்பு 250-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டி ருந்தனர்.

ஆனால், மருத்துவ மனைக்கு வந்த ஆகாஷின் உறவினர்கள், மாவட்ட ஆட்சியரே உடலை பெற் றுக் கொள்ள வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்ய உள்ளதால் உடலை ஒப்படைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இத னால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 50-க்கும் மேற் பட்டவர்களை காவல்துறை யினர் கைது செய்து அங்கி ருந்து அழைத்துச் சென்றனர்.

பின்னர், அரசு ராஜாஜி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணன், ஆர்.டி.ஓ. கரு ணாகரன் தலைமையிலான அதிகாரிகளிடம் ஆகாஷின் உடலை ஒப்படைத்தார். அதி காரிகள் உடலை காவல் துறை பாதுகாப்புடன் தத்த னேரி மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில், காவல் துறையினரால் அழைத்து வரப்பட்ட ஆகாஷின் பெற் றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் காரண மாக அரசு ராஜாஜி மருத்துவ மனை பிணவறை பகுதி முழு வதும் காலை முதல் பதற்ற மான சூழ்நிலை நிலவியது.