மணலூர்பேட்டையில் ஓராண்டுக்கும் மேலாக உடைந்த பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
8 Jul 2026, 1:30 am
<p><strong>மணலூர்பேட்டையில் ஓராண்டுக்கும் மேலாக உடைந்த பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை</strong></p><p>மணலூர்பேட்டை,ஜூலை 7- கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு, அனீஸ் சாய்பு வீதியில் உள்ள சிறு பாலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சேதமடைந்து கிடப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இந்த வீதியின் நடுப்பகுதியில் உள்ள பாலம் உடைந்து சிதில மடைந்துள்ளதால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக, அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட அந்த வீதிக்குள் நுழைய முடியாத அபாயகரமான சூழல் நிலவுகிறது. பாலத்தின் சேதமடைந்த பகுதியால், இரவு நேரங்களில் பல முறை விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் காய மடைந்துள்ளனர். நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு: உடைந்த பாலத்தைச் சீரமைக்கக் கோரி, பேரூ ராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். இருப்பி னும், நிர்வாகம் எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல், இந்த விவகாரத்தைக் கிடப்பில் போட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் அன்றாடம் நடக்கும் அவலத்தை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. உயிரிழப்பு ஏற்படும் வரை காத்திருக்காமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் களத்தில் இறங்கி, உடைந்த பாலத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
