தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மணலி நியூடவுன் - சடையங்குப்பம் மேம்பால இணைப்புச் சாலை பணிகளை விரைந்து முடித்திடுக! குடியிருப்போர் கூட்டமைப்பு கோரிக்கை

24 Nov 2025, 3:26 pm
மணலி நியூடவுன் - சடையங்குப்பம்  மேம்பால இணைப்புச் சாலை  பணிகளை விரைந்து முடித்திடுக! குடியிருப்போர் கூட்டமைப்பு கோரிக்கை
<p><strong>மணலி நியூடவுன் - சடையங்குப்பம் &nbsp;மேம்பால இணைப்புச் சாலை &nbsp;பணிகளை விரைந்து முடித்திடுக! குடியிருப்போர் கூட்டமைப்பு கோரிக்கை</strong></p> <p>சென்னை, நவ.24- சென்னை, மணலி நியூடவுன் மற்றும் சடையங்குப்பம் மேம்பாலம் இணைக்கும் சாலைப் பணிகளை அரசு உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் என்று வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி 2வது மண்டலம், 15வது வார்டுக்கு உட்பட்ட மணலி நியூ டவுன் - ஜோதி நகர் இணைப்புச் சாலை பல ஆண்டு களாகப் பராமரிப்பின்றி கிடக்கிறது. இந்தச் சாலை சுமார் 2.5 கி.மீ. நீளம் கொண்டது. சடையங் குப்பம் மேம்பாலத்தின் மேற்கு முனை யிலிருந்து மணலி நியூ டவுன் வரை யிலான பகுதி குண்டும் குழியுமாக மாறி, தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை சீரமைக்கப்படாத தால், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் 6 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கூட்டமைப்பின் கோரிக்கை வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே. சண்முகம், பொதுச் செயலாளர் ஆர். ஜெயராமன் மற்றும் இணைச் செயலாளர் என். துரைராஜ் ஆகியோர் சாலையை நேரில் ஆய்வு செய்தனர். தலைவர் டி.கே. சண்முகம் கூறுகை யில், தரமான சாலை அமைக்கக் கோரி ஒரு வருடத்திற்கு முன்பு போராட்டம் அறிவிக்கப்பட்டபோது, ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள தாக 15வது மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இந்தச் சாலை அமைக்கப்பட்டால் மணலி நியூடவுன் பகுதி 1, பகுதி 2 மற்றும் ஆண்டார்குப்பம், கடப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.எனவே, அரசும் மாநகராட்சியும் உடனடியாக இந்தச் சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது மணலி நியூ டவுன் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் ஜேசுராஜ், பன்னீர் செல்வம், டாமின் கோவிந்தராஜ், ஜோதி, ஸ்ரீதர், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.