தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

22 Feb 2026, 3:26 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ரூ.85 லட்சம் மோசடி செய்தவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது

உதகை, பிப்.22- உதகையில் பழைய கார்களை விற்றுத்தருவதாகக்கூறி ரூ.85 லட்சம் மோசடி செய்த வழக்கில், தப்பியோடிய நபர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் அயூப் என்ற அப்பாஸ் (39). இவர், பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு பொதுமக்கள் பலரி டம் வாங்கிய பழைய கார்களுக்கு முழு பணத்தையும் கொடுக்காமல், முன்பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். மேலும், அந்த வாகனங்களுக்கு தேவையான ஆவணங் களை வாங்கிக்கொண்டு, உடனடியாக அந்த வாகனங்களை வேறு இடத்தில் விற்றுள்ளார். ஆனால், வாகன உரிமை யாளர்களுக்கு பல மாதங்களாக பணம் தராமல் இருந்துள் ளார். மேலும், பணம் கேட்ட ஒரு சிலரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன்படி உதகை, சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த 31 பேரிடம் இதேபோன்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர். விசாரணையில், அவர் ரூ.85 லட்சம் வரை மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி, காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டார். அதன்பேரில் துணை காவல்  கண்காணிப்பாளர் சுந்தரராஜ் தலைமையிலான தனிப்படை யினர், கடந்த சில மாதங்களாக அயூப் என்ற அப்பாஸை தீவிர மாக தேடி வந்தனர். அவருடைய மனைவியின் ஊரான மைசூரு உள்பட பல இடங்களிலும் போலீசார் தேடி வந்த நிலையில், கோவை மாவட்டம், உக்கடத்தில் அயூப் பதுங்கியி ருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கோவைக்கு விரைந்து சென்று அவரை கைது செய்து, அவரை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சனி யன்று நேர்நிறுத்தி உதகை கிளைச் சிறையில் அடைத்த னர். இவர், நீலகிரி மட்டுமல்லாமல் கோவை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் இதுபோல மோசடியில் ஈடுபட் டுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாராவது இருந்தால் புகார ளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

போக்கியத்திற்கு வீடு தருவதாகக்கூறி பலரிடம் மோசடி

உதகை, பிப்.22- போக்கியத்திற்கு வீடு வாங்கி தருவதாகக்கூறி, கட்டி முடிக்கப்படாத ஒரே வீட்டைக் காட்டி பலரி டம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடையவரை காவல் துறையினர் கைது செய் தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் இக்பால் கான். இவர் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வரு கிறார். இவர் கடந்தாண்டு போக்கியத்திற்கு வீடு தேடி வந்தபோது, உதகை நொண்டிமேட்டை சேர்ந்த ஷாயின்ஷா என்பவர் புரோக்கர் மூலமாக அறிமுக மாகி, போக்கியத்திற்கு வீடு வாங்கி தருவதாக இக்பால் கானிடம் கூறினார். இதை நம்பிய இக்பால் கான்,  அவரிடம் கடந்தாண்டு ஜனவரி மாதம் ரூ.5 லட்சம்  பணம் கொடுத்தார். ஆனால், பல மாதங்களாகியும் அவர் வீடு வாங்கித் தரவில்லை. இதனால் அதிர்ச்சிய டைந்த இக்பால் பலமுறை ஷாயின்ஷாவை பார்த்து  பணத்தை தருமாறு திரும்பி கேட்டார். இதைத் தொடர்ந்து ஷாயின்ஷா ரூ.2¼ லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மேலும், மீதம் ரூ.2¾ லட்சம் பணத்தை தருவதாக நீண்ட நாட்களாக இழுத்தடித்துள்ளார். இக்பால் உதகை மத்திய காவல் நிலையத்தில் புகார ளித்தார்.  அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி  ஷாயின்ஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி உதகை கிளை சிறையில் அடைத்தனர்.

ஆட்டுக்குட்டி உயிரிழப்பு; தர்ணா

சேலம், பிப்.22- சேலம் அரசு கால்நடை மருத்துவமனையில், ஆய் வாளர் செலுத்திய ஊசியால் ஆட்டுக்குட்டி உயிரிழந்த தாகக்கூறி, அதன் உரிமையாளர் மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. சேலம், நான்கு ரோடு அடுத்த ரத்தினசாமிபுரம், வையாபுரி காலனிப் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் (26). அரசுத் துறையில் தற்காலிகப் பணியாள ராக உள்ள இவர், ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். மூன்று மாதக் குட்டியான அந்த ஆடு, வளர்ச்சி குறை வாக இருந்ததால் அதற்குச் சிகிச்சை அளிக்கத் திட்ட மிட்டார். இதற்காக சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ஆட்டுக் குட்டியை அழைத்து வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த கால்நடை ஆய்வாளர் ஆட்டுக்குட்டியை பரிசோதனை செய்து ஊசி செலுத்தியுள்ளார். ஆனால், ஊசி செலுத்திய சில நிமி டங்களிலேயே ஆட்டுக்குட்டி உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வன், இது குறித்து அங் கிருந்த ஆய்வாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையான பதில் அளிக்காமல், அலட்சி யமாக பேசியதாக கூறப்படுகிறது. முறையான மருத்துவர் சிகிச்சை அளிக்காமல், ஆய்வாளர் ஊசி செலுத்தியதே ஆட்டின் மரணத்திற்கு காரணம் எனக்கூறி, தமிழ்ச்செல்வன் தனது நண்பர் களுடன் இணைந்து மருத்துவமனை வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து, கால் நடை மருத்துவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

போலி பணத்தாள்கள்: ஒருவர் கைது

தருமபுரி, பிப்.22- தருமபுரியில் வங்கி ஒன்றில், தனது கணக்கில் போலி பணத்தாள்களை செலுத்த முயன்றவரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி நகரில் செயல்படும் தேசியமயமாக்கப் பட்ட வங்கிக்கிளைக்கு வியாழனன்று வந்த நபர், காசா ளரிடம் ரூ.23 ஆயிரத்தை கொடுத்து தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்படி கூறியுள்ளார். காசாளர்  மதிவாணன் பணத்தை கணக்கிடுவதற்காக இயந்திரத் தில் செலுத்தியபோது, சில தாள்கள் எண்ணிக்கைக்கு  எடுத்துக்கொள்ளவில்லையாம். அந்த இயந்திரத்தில் திரும்பவந்த ரூ.200 மதிப்பிலான 24 தாள்களை சோதனை செய்ததில், அவை அனைத்தும் போலி  பணத்தாள்கள் என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் மலர்விழி தருமபுரி நகர காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில், அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்  தருமபுரி மாவட்டம், நாட்டாண்மைபுரம் பகுதியை சேர்ந்த வடிவேல் என தெரியவந்தது. அவரிடமிருந்த போலி பணத்தாள்களை பறிமுதல் செய்த போலீ சார், அவரை கைது செய்தனர்.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு  ரீடு நிறுவனம் மருத்துவ முகாம்

திருப்பூர், பிப்.22- அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி தேவம் பாளையத்தில் ரீடு நிறுவனம், ரேவதி மெடிக்கல் சென்டர் இணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர் களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டம்மாள் வரவேற்புரை ஆற்றினார். ரேவதி மெடிக்கல் சென்டர் முகாம் மேலா ளர் சதீஷ்குமார் நோக்க உரையாற்றினார். டாக்டர்  கனித்ரா வரதராஜன் பொது மருத்துவர் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார். இந்த முகாமில் இலவச மருத்துவ ஆலோசனைகள், சர்க்கரை பரிசோ தனை ரத்த அழுத்த பரிசோதனை வழங்கப்பட்டது.  புலம்பெயர்ந்த கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக் கும், தாய்மார்களுக்கும் ஹார்லிக்ஸ் மற்றும் ஊட்டச் சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

12 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை துவக்கி வைப்பு

தருமபுரி, பிப்.22- தருமபுரி ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழாவில், 12 வழித் தடங்களில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லக அதியன் கூட்டரங்கில், அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனி யன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம் பங்கேற்று, தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ரூ.103.80 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத் தும், முடிவுற்ற ரூ.45.74 கோடி மதிப் பிலான 60 திட்டப் பணிகளை பயன் பாட்டிற்கும் கொண்டு வந்தார். தொடர்ந்து, ரூ.27.80 கோடி மதிப்பில் 4,115 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசுகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தரும புரி மாவட்டத்தில் இதுவரை ரூ.740.378 கோடியில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 810 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ள னர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 23,626 பேரும், நலன் காக்கும் ஸ்டா லின் திட்டத்தின் கீழ் 21,615 பேரும் பய னடைந்துள்ளனர், என்றார். முன்னதாக, அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலம் சார்பில், மகளிர் விடியல் பயண பேருந்து திட்டத்தில், 12 வழித் தடங்களில் புதிய பேருந்துகள் சேவை, ஒரு மாற்றியமைக்கப்பட்ட வழித்தட சேவை ஆகியவற்றை அமைச்சர்  தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக ளில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ், தரும புரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி,  சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, நகர் மன்றத் தலைவர் லட்சுமி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் தடங்கம்  சுப்பிரமணி, வேடம்மாள், இன்பசே கரன், மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டாசு வெடித்து 6 பேர் காயம்

தருமபுரி, பிப்.22- தருமபுரியில் இறுதி ஊர்வலத்தின்போது, பட்டாசு வெடித் ததில் 6 பேர் காயமடைந்த சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், சின்னகுரும்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், கடந்த வியாழனன்று உயிரிழந்தார். இதைய டுத்து வெள்ளியன்று அவரது இறுதி ஊர்வலம் நடைபெற் றது. ஆட்டோவில் பட்டாசுகளை அடுக்கிகொண்டு வரிசை யாக வெடித்துச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மேலே வீசிய பட்டாசு, மின்கம்பியில் சிக்கி பட்டாசு வைத்தி ருந்த ஆட்டோ மீது விழுந்து வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் ஆட்டோ அருகே சென்று கொண்டிருந்த பெரமன், தங்கம், பாஸ்கர், திருப்பதி, சதீஷ், மயில் தேவன் ஆகிய 6  பேர் காயமடைந்தனர். தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹைதராபாத் - கொல்லம்  சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கோவை, பிப்.22- கோவை (போத்தனூர்) வழியாக இயக்கப்பட்டு வரும் ஹைதராபாத் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை காலம், பயணிகளின் கூடுதல் தேவையைக் கருத்தில் கொண்டு மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ஹைதராபாத் மற்றும் கொல்லம் இடையே ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் களின் சேவை மேலும் ஐந்து வாரங்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வண்டி எண் 07193 ஹைதராபாத் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் பிப்.28 முதல் மார்ச் 28 வரை சனிக்கிழமைகளில் இரவு 23.10 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 07.10 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 22.12 மணிக்கு கோவை போத்தனூர் ரயில் நிலை யத்திற்கு வந்து சேரும். மறுமார்க்கமாக, வண்டி எண் 07194  கொல்லம் – ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் மார்ச் 2 முதல் மார்ச் 30 வரை திங்கட்கிழமைகளில் காலை 10.45  மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, செவ்வாய்க் கிழமை மாலை 17.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடை யும். இந்த ரயில் திங்கட்கிழமை மாலை 18.20 மணிக்கு கோவை போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, படுக்கை வசதி மற்றும் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. போத்த னூர் தவிர திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் ஜோலார் பேட்டை ஆகிய முக்கிய நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும் என்பதால், கோவையைச் சேர்ந்த கேரளா மற்றும் ஆந்திர மாநிலப் பயணிகளுக்கு இந்தச் சேவை நீட்டிப்பு பெரும் பயனுள்ளதாக அமையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.