தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

5 Mar 2026, 3:59 pm
திருச்சி விரைவு செய்திகள்

சிறுமியை பாலியல் தொந்தரவு  செய்த இளைஞருக்கு  7 ஆண்டுகள் சிறை தண்டனை

தஞ்சாவூர், மார்ச் 5-  ஆறு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு, தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு, ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டைச் சேர்ந்த அருள் (22) என்பவர், கடந்த 2023 ஆம் ஆண்டில் பாலியல் தொந்தரவு செய்தார்.  இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து அருளை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, அருளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து ரூ.2 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டார்.

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்  கூட்டம்

தூத்துக்குடி,மார்ச் 5- தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து விரைந்து தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்த குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி,  நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 32 மனுதாரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை  நேரடியாகச் சந்தித்துத் தங்கள் புகார்களைத் தெரிவித்தனர். நிலத் தகராறு, குடும்பப் பிரச்சனைகள் மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடர்பான மனுக்கள் எஸ்.பி.யிடம் வழங்கப்பட்டன. பொதுமக்களின் புகார்களைப் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன், அந்த மனுக்கள் மீது உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்திற்குட்பட்ட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொழிலாளி தற்கொலை

குழித்துறை, மார்ச் 5- குமரி மாவட்டம், கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (36) ,கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில்  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் 35 பேரிடம் ரூ.1.5 கோடி மோசடி

தஞ்சாவூர், மார்ச் 5-   தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள், விவசாயிகள், சொந்தத் தொழில் புரிபவர்கள் என்று 34 பேரிடம் கடந்த பல நாட்களாக சமூக வலைதளங்கள் வாயிலாக சுமார் ரூ.1.50 கோடி அளவில் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து, சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் நகர் பகுதி, கும்பகோணம் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள், வேலை தேடுபவர்கள், எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர், பார்ட் டைம் ஜாப் தேடுபவர்கள் என சுமார் 34 பேர் தங்களை வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு, பண மோசடி செய்ததாக கடந்த 10 நாட்களாக தஞ்சாவூர் சைபர் க்ரைம் காவல் பிரிவில் புகார் செய்தனர்.  இதன்படி, ஒவ்வொரு நபரிடம் இருந்தும் சுமார் 5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை ஆசை வார்த்தை கூறி சுமார் ரூ.1.50 கோடி வரை மோசடி நடந்துள்ளது. இவ்வாறு வந்த புகார்களின் அடிப்படையில், தஞ்சாவூர் சைபர் க்ரைம் காவல் பிரிவினர் 34 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இதுகுறித்து, சைபர் க்ரைம் காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், “நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, போலி இணைப்புகளை (Links) கிளிக் செய்யாமல் இருத்தல் வேண்டும்.  மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது என்று பல்வேறு வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.  ஏடிஎம் ரகசிய எண்களை தெரிவிப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது’’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மார்ச் 10 தென்காசியில்  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தென்காசி, மார்ச் 5- தென்காசி மாவட்டத்தில்  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 10 (செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை யில் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்துத்துறை அலுவ லர்களும் பங்கேற்கிறார்கள். இக்குறைதீர் கூட்ட த்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு தென்காசி மாவட்ட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு  விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

தென்காசி, மார்ச் 5- தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டு த்துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் மேல்நி லைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கும் விழா கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு நகர்மன்ற ஆணையாளர் லட்சுமி தலைமை வகித்தார்.  பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.  நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபூர் ரஹ்மான் 30 வகையான விளையாட்டு உபகரணங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி,பேசினார்.   இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சிவா, மாதவராஜ்,  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் குமாரசேகர், அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் கலைமதி, உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், உதவி ஆசிரியர் பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.  சுபாஷ் நன்றி கூறினார்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள்  மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

நாகர்கோவில், மார்ச் 5-     இந்தியத்  தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இறச்சகுளம் அரசு தொடக்க ப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் -மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா மார்ச் 5 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இறச்சகுளம்  அரசு தொட க்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதோடு வாக்குச்சாவடி  மையத்தில் குடிநீர் வசதிகள், மின்சார வசதிகள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து வாக்குச்சாவடி மை யங்களில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.