சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
8 Mar 2026, 3:42 pm
<p><strong>சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 8- குமாரபாளையம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது நிலை யில், உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே 7 வயது சிறுமி சனியன்று இரவு, தனது வீட்டின் முன்பு விளை யாடிக் கொண்டிருந்த போது, திடீரென காணாமல் போனார். நீண்ட தேடுதலுக்கு பிறகு மீண்டும் சிறுமி வீட்டுக்கு வந்த பொழுது, அவரது உடலில் மாற்றங்கள் இருந்ததால், பெற்றோர் அவரை குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரி சோதித்த மருத்துவர் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளா கியுள்ளார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் சிறுமியை அழைத்து சென்றதது தெரியவந்தது. இந்நிலை யில், சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் பதுங்கியி ருந்த அந்த நபரை போலீசார் கைது செய்து, காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்தனர். இதற்குள் இத்தகவல் குமார பாளையம் நகரம் முழுவதும் பரவியதால் நூற்றுக்கணக் கானோர் குமாரபாளையம் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு, அந்த நபரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனை யடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா தலைமை யில், நூற்றுக்கணக்கான போலீசார் குமாரபாளையம் பகுதி யில் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே, போலீசார் விசாரணை மேற்கொண்ட தில், பிடிபட்ட நபர் சேலம், அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் என்றும், குமாரபாளை யத்தில் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டன் மீது போக்சோ, கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
