கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
26 Dec 2025, 4:32 pm

மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை கைதானவர் மீது

குண்டர் சட்டம் பாய்ந்தது! ஈரோடு, டிச.26- ஈரோடு அருகே மூதாட்டியை கொலை செய்து 5 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெரியசேமூர், முதலிதோட்டம், எல்விஆர் காலனியை சேர்ந்தவர் கமலம் (68). அதே பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே உள்ள தோப்பு காலனியை சேர்ந்த ராமு (20) என்பவரும் தங்கி யிருந்தார். இந்நிலையில், தனியாக வசித்து வந்த கம லத்தை ராமு கொலை செய்துவிட்டு 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, நகைக்காக மூதாட்டியை கொலை செய்த ராமு மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, ராமு மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையிலுள்ள ராமுவிடம் போலீசார் வியாழனன்று வழங்கி னர்.

சிறையில் சோதனைக்கு எதிர்ப்பு; வழக்குப்பதிவு

கோவை, டிச.26- கோவை மத்திய சிறையில் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை மத்திய சிறைச்சாலையில் விசா ரணை கைதிகள் மற்றும் சிறைவாசிகள் என 2,000க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள் ளனர். கைதிகளை உறவினர்கள் அல்லது வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு முறையாக மனு அளித்து அனுமதி பெற்று, குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில், உக்கடம் பகுதியைச் சேர்ந்த அன்சாத் மீரான், ஜாபர் அலி, அப்துல் முபா ரக், சதாம் உசேன் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியின் வழக்கறிஞர் சந்திக்க வந்திருப்பதாகக் கூறி, அவரை சந் திக்க அனுமதிக்கக் கோரினர். சிறை அதிகாரி கள் அவர்களை சந்திப்பு அறைக்கு அழைத்து செல்வதற்கு முன்பு, விதிப்படி உடல் சோதனை செய்ய முயன்றனர். இதற்கு அன் சாத் மீரான் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரி வித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து சிறை வார்டன் ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். அதன் அடிப்படையில் போலீசார் அன் சாத் மீரான் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.