தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

8 Dec 2025, 4:39 pm
சென்னை விரைவு செய்திகள்

நெற்பயிரை தாக்கும் புகையான் பூச்சி வேளாண் அதிகாரிகள் விளக்கம் வேலூர், டிச.8- வேலூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் நெல் பயிரை புகையான் பூச்சி தாக்கும் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தெரிவித்துள்ளனர். நெற்பயிரை புகையான் பூச்சி தாக்கினால் விளைச்சல் பாதிக்கும். பயிரின் அடிப்பாகத்தில் பூச்சிகள் மற்றும் குஞ்சுகள் காணப்படும். பயிர்கள் மஞ்சளாக மாறி பழுப்பு நிறமாகி கருகியது போல் தோன்றும். தாக்கப்பட்ட பயிர்கள் வலுவிழந்து சாயும், பால் பிடிப்பதில்லை, கதிர்கள் பாதிக்கும், வயலில் ஆங்காங்கே வட்ட வடிவமாக தாக்கப்பட்ட பகுதிகள் காணப்படும். நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்பூச்சிகள் ஒட்டி கொண்டிருக்கும். தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து தீய்ந்த மாதிரி காட்சியளிக்கும். இந்த பழுப்புத் தத்துப்பூச்சி புல்தழைகுட்டை நோய், காய்ந்த குட்டை நோய் மற்றும் வாடிய குட்டை நோய் ஆகியவற்றை பரப்புகிறது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகளை இடிக்க எதிர்ப்பு:  ஆட்சியரிடம்  ஈஷா பகுதி மக்கள் மனு வேலூர், டிச.8- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், குடியாத்தம் நகரம், பேர்ணாம்பட்டு சாலை, நெல்லூர்பேட்டை ஈஷா பகுதியைச் சேர்ந்த 65 குடும்பத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில், தாங்கள் கடந்த 80 ஆண்டுகளாக ஈஷா ஏரிப் பகுதியில் வசித்துவருவதாகவும், தங்கள் வீடுகள் நெடுஞ்சாலை மற்றும் நீர்நிலை பகுதியில் இருப்பதாகத் தற்போது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.வருகிற டிசம்பர் 10ஆம் தேதி வீடுகளை இடிக்க நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், வீடுகளை இடித்தால் நடுத்தெருவில் நிற்க நேரிடும் என்றும், பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தங்கள் வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போரூர் - பூந்தமல்லி ஓட்டுநர் இல்லா  மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் சென்னை, டிச.8- சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டு வரும் போரூர் - பூந்தமல்லி வரையிலான 10 கி.மீ. பாதையில், திட்டமிடப்பட்டிருந்த ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பாதையில் ரயில் மற்றும் வழித்தடத்திற்கான பாதுகாப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) சோதனை ஏற்கெனவே நிறைவடைந்தது. எனினும், ரயில்வே வாரியத்திடம் இருந்து இதுவரை ஒப்புதல் மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை இந்தப் பாதையில் இந்த மாதத்தில் தொடங்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகே, பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு மேற்கொள்வார். இந்தச் செயல்முறைகள் முடிந்து, விரைவில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது, இந்தப் பாதையில் 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

போதையில் கார் ஓட்டி வாகனங்களை சேதப்படுத்தியவர் கைது

சென்னை, டிச.8- கொளத்தூர் ஜவகர் நகரைச் சேர்ந்த அசோக் (28) என்பவர் சனிக்கிழமையன்று போதையில் கார் ஓட்டி, கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலை, திருவீதி அம்மன் சாலை, காமராஜர் சாலை மற்றும் பெரியார் நகர் வழியாகத் தறிகெட்டுச் சென்று பைக்கில் சென்றவர் மீதும் மோதியதுடன், மேலும் 5 வாகனங்களை இடித்து சேதப்படுத்தினார்.  இந்த சம்பவத்தில், அயனாவரம் பகுதியில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கொளத்தூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தவெக சேலம் மாவட்டச் செயலரிடம் சிபிஐ விசாரணை கரூர், டிச.8 - கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27 ஆம் தேதி தவெக பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்.19 ஆம் தேதி முதல் கரூர் பொதுப் பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் குழு, திங்கள்கிழமை தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 5 பேர் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விசாரிக்கப்பட்டனர். உடற்கூராய்வு மேற்கொண்ட மருத்துவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையைச் சேர்ந்த சங்கரின் குடும்பத்தினரிடமும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வியாபாரியை மிரட்டிப் பணம்  பறித்த இருவர் கைது சென்னை, டிச. 8- வில்லிவாக்கம் ராஜமங்கலம் பிரதான சாலையில் உணவகம் நடத்தி வருபவர் விஜய் (50). கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி, இவரது கடைக்கு வந்த இரண்டு நபர்கள், கத்தியைக் காட்டி அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் கொடுக்க மறுத்த தால், இருவரும் விஜயைத் தாக்கிப் பணப் பெட்டியில் இருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு ஓடினர். இது குறித்து விஜய் ராஜமங்கலம் காவல் நிலையத்தினர் நட வடிக்கை  எடுத்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (27) மற்றும் பாஸ்கர் (33)  ஆகியோர் கைது செய்தனர்.

தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கண்டித்து  புதுச்சேரியில் எழுச்சிமிகு பேரணி, ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, டிச.8- தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துள்ள  பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் திங்களன்று (டிச.8) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன்  நடைபெற்றது. புதுச்சேரி தலைமை செயலகம் நோக்கி நேரு வீதியில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு,  சிபிஐ மாநில செயலாளர் சலீம், சிபிஎம்  மாநில குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள், சிபிஐஎம்எல்  மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், விசிக மாநில நிர்வாகி தலையாரி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர்கள் முருகன்,விஸ்வநாதன், கலைநாதன், ராஜாங்கம், கொளஞ்சியப்பன், சீனுவாசன், சத்தியா, தினேஷ்பொன்னையா, அந்தோணி, தேவப்பொழிலன் தமிழ்மாறன் உள்ளிட்ட திரளான மிஷின் வீதியில் இருந்து ஊர்வலமாக சென்றனர். அப்பொழுது காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து, நேரு வீதியில் தடுத்து நிறுத்தினர். பின்னர் தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3 சட்டமன்றத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கம்: முதலமைச்சர் அடிக்கல்

சென்னை, டிச.8- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திங்க ளன்று (டிச. 8) தலைமைச் செயலகத்தில், 23 சட்ட மன்றத் தொகுதிகளில் ரூ. 69 கோடியில் கட்டப்படவுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்களின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  விளையாட்டு வசதிகள் இல்லாத தொகுதிகளில் தடகளம், கால்பந்து, கபாடி உள்ளிட்ட குறைந்தபட்சம் ஐந்து முக்கிய விளை யாட்டுகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், இந்தத் திட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், ரூ. 98.92 கோடியில் தேங்காப்பட்டணம் உள்ளிட்ட இடங்களில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.