வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 130 பேரிடம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது
18 Feb 2026, 3:04 pm
<p><strong>வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 130 பேரிடம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது</strong></p>
<p> நாகர்கோவில், பிப் . 18 வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணத்தை ெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமலும் பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்டாலினிடம் பாதிக்கப் பட்டவர்கள் சிலர் புகார் மனு ஒன்றை அளித்த னர். அந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். காவல் துணை கண்கா ணிப்பாளர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி னர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் மாதவபுரம் பிள்ளையார் கோவில் தெரு வை சேர்ந்த ராம்குமார் என்ப வரது மகன் சந்தோஷ் (31) என்பவர் மகாதானபுரத்தில் சண்டி மேன் பவர் கன்சல் டிங் என்ற பெயரில் நிறுவ னத்தை தொடங்கி துபாய் ரஸ் அல்-கைமா ல் கன்சல் டிங் போன்ற பல்வேறு பெயர் கொண்ட தனது நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக சுமார் 130 நபர்களிடம் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு அனுப்பாமலும் சிலரை விசிட்டிங் விசாவில் வெளிநாட்டிற்கு அனுப்பி வேலைவாங்கி தராமல் திருப்பி அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்தது. இவ்வாறு 130 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ஏமாற்றி யது தெரியவந்தது. இந்நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்படி குற்றவாளி சந் தோஷ் என்பவரை மதுரை யில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்க்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ யாரேனும் பணம் கொடு த்து ஏமாந்திருந்தால் மாவட்ட குற்றப்பிரிவில் நேரடியா கவோ அல்லது 9498196976 என்ற எண்ணிற் கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் உண்மை தன்மை மற்றும் ஏஜென்ட்டுகள் குறித்து ஏதே னும் சந்தேகம் இருந்தால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் 7010363173 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது போன்ற மோசடிகளில் சிக்கி கொண் டால் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் வாட்சப் எண்ணிலோ (8122223319) அல்லது நேரடி யாகவோ புகார் அளிக்க லாம். வேலை வாங்கி தருவ தாக பணம் பெற்று ஏமாற்றுப வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக இச்செயல்களில் ஈடுபடுப வர்கள் மீது குண்டர் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் ஸ்டாலின் எச்சரித்துள் ளார்.</p>
