கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
23 Dec 2025, 4:05 pm

ஒரு வழிப்பாதையில் எதிரே வந்து விபத்து ஏற்படுத்தியவர் கைது

திருப்பூர், டிச. 23 - திருப்பூர் அவிநாசி சாலை எஸ்.ஏ.பி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் திங்களன்று இரவு அதிவேகமாக காரில் வந்தவர், இருசக்கர வாகனத்தில் வந்த குடும்பத்தினர் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இது குறித்து காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது: திருப்பூர் புஷ்பா தியேட்டர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து அஜய் என்பவர், அவரது மனைவி சௌந்தர்யா, குழந்தை வர்ஷித் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் 15 வேலம்பாளையம் செல்வதற்காக அவிநாசி சாலை எஸ்.ஏ.பி. தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அரு கில் இருந்த தனியார் விடுதியில் இருந்து அவிநாசி சாலை எஸ்ஏபி தியேட்டர் நோக்கி விதிமுறைக்குப் புறம்பாக எதிர்தி சையில் சொகுசுக் கார் விரைவாக வந்தது. இந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அஜய் குடும்பத்தி னர் மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அஜய்க்கு காலில் காயம் ஏற்பட்டதுடன், சௌந்தர்யாவுக்கு தலையி லும், குழந்தை வர்ஷித்துக்கு காலிலும் காயம் ஏற்பட்டது. இவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை செய்த போக்குவரத்து காவல் துறையினர், தமிழகத்தில் பிரபல ஜவுளி வர்த்தக நிறுவ னத்தின் குடும்பத்தைச் சேர்ந்த பிரவீன்ராகவ் (வயது 43) என்ப வர் சொகுசுக்காரை மது போதையில், அதிவேகமாக கவனக் குறைவாக ஓட்டிவந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகத் தெரியவந்து இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன் ராகவைக் கைது செய்தனர்.

நில அளவையரை மிரட்டியதாக வழக்கு

அவிநாசி, டிச.23- அவிநாசி அருகே தெக்கலூரில் நில அளவீடுக்கு சென்ற பெண் நில அளவையரை தனியார் நிறுவனத்தினர் வளாகத் திற்குள் வைத்து மிரட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய் துள்ளனர். தெக்கலூர் ஆலம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவ னத்தின் நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த் துறையில் ஆனந்த சுப்பிரமணியம் என்பவர் விண்ணப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து, நில அளவையர் பிரியா சம்பவ இடத் திற்கு சென்றுள்ளார். அப்போது நிலம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அளவீடு செய்ய இயலாது என அவர் தெரிவித்த்துள்ளார். இதை ஏற்க மறுத்த ஆனந்த சுப்பிரமணியம் உள்ளிட்டோர், அளவீடு செய்து கொடுத்தால் தான் வெளியே விடுவோம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நீண்ட நேரம் போராடி பிரியா வளாகத் தில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நில அளவையர் பிரியா அளித்த புகாரின் பேரில், அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

பட்டுக்கூடு விவசாயிகளை காக்க வைக்கும் சில்வர் மைன் சில்க்ஸ் பிராசசர்ஸ் நிறுவனம்

உடுமலை,டிச.23- சில்வர் மைன் சில்க்ஸ் பிராசசர்ஸ் நிறுவ னத்திற்கு பட்டுக்கூடு விற்பனை செய்த 81 விவ சாயிகளுக்கு ரூ. 24 லட்சத்து 47 ஆயிரத்து 416 பணத்தைத் தராமல் அந்த நிறுவனம் காலதா மதம் செய்து வருகிறது. இதற்காக ஓர் ஆண் டுக்கு மேலாக காத்திருப்பதாக விவசாயி கள் வேதனையுடன் கூறினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி செக்போஸ்ட் அருகில் உள்ள சில்வர் மைன் சில்க்ஸ் பிராசசர்ஸ் என்ற நிறுவனம் பட்டு விவ சாயிகளிடம் பட்டுக்கூடு வாங்கிய வகையில், திருப்பூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த 81 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சத்து 47 ஆயிரத்து 416 தர வேண்டி யுள்ளது. விவசாயிகளுக்கு பணத்தை பெற்று தர வேண்டும் என பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், உடுமலை வருவாய் கோட்டாட் சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் இது குறித்து பல முறை மனு அளித்தும் இது வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பல போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருப்பது விவசா யிகளை மிகுந்த ஏமாற்றம் அடைய வைத்துள் ளது. இது குறித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் செல்வராஜ் கூறுகையில், 1864 ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பணத்தை வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கடிதத்திற்கு, ஆறு மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளை வஞ்சிப்பது நியா யமில்லை. கடந்த 20 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வரும் பொங்கல் திருவிழாவிற்கு முன்பு விவசாயி களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரி வித்தார்.

காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு

திருப்பூர், டிச. 23 – காங்கேயம் வட்டாரத்தில் வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த மக்களுக்கு ஓராண்டு காலமாக பட்டா வழங்கப்படாத நிலையில், வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி காத்தி ருப்புப் போராட்டம் நடத்துவதென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள் ளது. காங்கேயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா குழுக் கூட்டம் செவ்வாயன்று தாலுகா குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.ஜெயபால், தாலுகா குழுச் செயலாளர் (பொறுப்பு) இரா. செல்வராஜ் உள்பட தாலுகா குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி காங்கேயம் வட்டாரத் தில் வீடில்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு மாபெரும் மக்கள் பேரணியுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது. மொத்தம் 1200 மனுக்கள் கொடுக்கப்பட்டது. இதுவரை இந்த மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், காங்கேயம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக் கான மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.