கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
5 Dec 2025, 4:21 pm

மாணவியை வன்கொடுமை செய்தவர் கைது

உதகை, டிச.5- உதகையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர், அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய தந்தை இறந்துவிட்ட நிலையில், தயார் கடை வியாபாரம் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார். இதனிடையே, மாண விக்கு உதகையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், மாணவியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த வாலிபர் வீட்டுக்குள் புகுந்து திரு மணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாண வியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவருடைய தாயார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவி கர்ப்பமாக இருப்பதும், குழந்தை பிறப்புக்கான வலி ஏற்பட்டதும் தெரியவந்தது. உட னடியாக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உதகை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாணவியுடன் பழகி கர்ப்ப மாக்கிய பிரவீன் (22) என்வரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத் தனர்.

இரும்பு வியாபாரி கொலை: மனைவியின் தம்பி கைது

கோபி, டிச.5- இரும்பு வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவ ரின் மனைவியின் தம்பியே கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், எல்ஐஜி கால ணியைச் சேர்ந்தவர் விஜயகுமார். பழைய இரும்பு வியா பாரம் செய்து வரும் இவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கனகமணி என்பவருடன் திருமணமாகி தனியாக வசித்து வரு கின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று மதியம் விஜயகுமா ரின் தாயார் பழனியம்மாள், தனது சம்பள பணத்தை எடுத்து கொடுக்க வேண்டி விஜயகுமாரை அழைத்து செல்ல வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது விஜயகுமார் தலை, கழுத்து, வலது காலில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள் ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றது தெரியவந்தது. வாகனத்தின் எண்ணை ஆய்வு செய்தபோது, வாகனத்தில் சென்றது கனகமணியின் தம்பி என தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்திய தில், விஜயகுமாருக்கும், கனகமணியின் தம்பியான செந்தில் குமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள் ளது. விஜயகுமார் தேவையில்லாத வகையில் பணத்தை செலவு செய்து விட்டு செந்தில்குமாருக்கு பணம் கொடுக்கா மல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார், விஜயகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.

விடுதி உணவை உட்கொண்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

சேலம், டிச.5- சேலத்தில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 70க்கும் மேற்பட்டோருக்கு திடீ ரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் சீரகாபாடி பகுதியில் உள்ள விநா யகா மிஷன் யுனிவர்சிட்டி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த விடுதியில் இரவு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட மாணவ, மாணவிகள் பல ருக்கு வாந்தி, மயக்கம் வந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின் றனர். வெள்ளியன்று காலை முதல் அடுத் தடுத்து 70க்கும் மேற்பட்டோர் மேலும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அனை வரையும் அதே மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த தகவலறிந்த சேலம் மாவட்ட மருத்துவக்குழுவினர் மற்றும் உணவு பாது காப்புப் துறை அதிகாரிகள் தலைமையி லான குழுவினர் மருத்துவக் கல்லூரி விடு திக்கு சென்று ஆய்வு செய்தனர். சுகா தாரம் இல்லாமல் இருந்த உணவு கூடங்கள் மற்றும் பராமரிப்பு இல்லாத சமையலறை ஆகியவற்றை கண்டு அதிர்ச்சி அடைந் தனர். உடனடியாக அனைத்தையும் அப்பு றப்படுத்தி உணவு சமைக்கும் கூடத்திற்கு சீல் வைத்தனர். விசாரணை முடியும் வரை இந்த பகுதியில் சமைக்க அனுமதி இல்லை என்றும், உணவு பாதுகாப்புத் துறை அதிகா ரிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து அதிகா ரிகள் ஆய்வு நடத்திய நிலையில், உண வின் மூலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை. உணவு சமைப்பதற்கு பயன்ப டுத்தப்பட்ட தண்ணீரில் கலப்படம் இருப்ப தாக அறிந்த அதிகாரிகள் மூன்று இடங்க ளில் தண்ணீரை ஆய்வுக்கு எடுத்துச் சென் றுள்ளனர்.