திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா
6 Oct 2026, 9:08 pm
<p>திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா முன்னிட்டு நடைபெற்ற கைப்பந்து போட்டியில் சுமார் 22 அணிகள் கலந்து கொண்டன. அதில் மம்சாபுரம் அணி வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றது. சிவகாசி அணி இரண்டாம் பரிசும், இராஜபாளையம் அணி மூன்றாவது பரிசும், சித்துராஜபுரம் அணி நான்காவது பரிசும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை மம்சாபுரம் நகர கைப்பந்து கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.</p>
