தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திரிணாமுல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 60 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு : மம்தா அவசர ஆலோசனை

1 Jun 2026, 9:27 pm
திரிணாமுல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 60 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு : மம்தா அவசர ஆலோசனை

திரிணாமுல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 60 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு : மம்தா அவசர ஆலோசனை

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஒடுக்கும் நோக்கத்தில், அக்கட்சியின் 50 எம்எல ஏக்கள், 20 எம்.பி.,க்களை பாஜக விலை க்கு வாங்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதனை பாஜக மூத்த தலைவர் சௌமித்ரா கான் ஊடகங்கள் முன்னிலை யிலேயே ஒப்புக்கொண்டு பேசினார்.

இதனால் பதற்றமடைந்த திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ஞாயி றன்று சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். மொத்தமுள்ள 80 சட்ட மன்ற உறுப்பினர்களில் வெறும் 20 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வரவில்லை. இத னால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

சமாளிப்பு

இதனை தொடர்ந்து தெற்கு கொல்கத்தா வின் காளிகாட்டில் உள்ள மம்தாவின் இல்லத் திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ்,”அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி ஆகியோருக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து போராட்டம் நடத்திய கட்சித் தொண்டர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதனால், கூட்டத்திற்கு வராத சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கள நிலவரத்தைக் கையாள்வதிலும், கைது செய்யப்பட்ட தொண்டர்களுக்கு உதவுவதிலும் சிக்கியுள்ளனர்” என்று கூறி சமாளித்தார்.

இந்நிலையில், ஒரே நேரத்தில் 60 எம்எல் ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தால் பாஜகவின் “ஆபரேஷன் லோட்டஸ் (எம்எல்ஏக்கள், எம்.பி.,க்களை விலைக்கு வாங்கும் அடாவடி)” திரிணாமுல் கட்சிக்குள் ஊடுருவியுள்ளதா? என்பது குறித்து மூத்த தலைவர்களிடம் மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.