தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மம்தா பானர்ஜியின் வீழ்ச்சி: மமதைக்கு கிடைத்த பரிசு!

5 Jun 2026, 1:08 am
மம்தா பானர்ஜியின் வீழ்ச்சி: மமதைக்கு கிடைத்த பரிசு!

மம்தா பானர்ஜியின் வீழ்ச்சி: மமதைக்கு கிடைத்த பரிசு!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள சூழலில், அக் கட்சி அப்பட்டமான உள்கட்சிப் பூசலாலும் பிளவாலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளது. கடந்த 15 ஆண்டுகாலமாக அம்மாநிலத்தில் மம்தா பானர்ஜி கட்டவிழ்த்துவிட்ட அராஜக ஆட்சிக்கும், வன்முறை அரசியலுக்கும், குடும்ப ஆதிக்கத்திற்கும் மக்கள் வழங்கிய தகுந்த சம்மட்டி அடியாகவே இந்தத் தோல்வி அமைந்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகும் கூட, தனது அதிகார மமதையையும், தோல்வி யையும் ஒப்புக்கொள்ள மம்தா பானர்ஜி மறுப்பது அவருடைய அரசியல் அறியாமையையே காட்டுகிறது. ஒருகாலத்தில் கொல்கத்தாவின் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களைத் தன் ஒற்றை முழக்கத்தால் திரட்டிய மம்தாவின் பொதுக்கூட்டத்திற்கு, தற்போது வெறும் 500 பேர் கூட வராத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு அக் கட்சியின் அராஜகக் கொள்கை மட்டுமல்லாமல், மம்தா பானர்ஜி தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியை கட்சியின் அடுத்த வாரிசாகத் திணிக்க முயன்ற குடும்ப அரசியலும் முக்கி யக் காரணமாகும். தோல்விக்குப் பிறகு நடந்த கூட்டத்தில், மூத்த எம்.எல்.ஏ-க்களை எழுந்து நின்று அபிஷேக் பானர்ஜிக்கு மரியாதை செலுத்தக் கோரிய மம்தாவின் தன்னிச்சையான போக்கு, உள்கட்சிப் பிளவுக்கு வித்திட்டுள்ளது. “இனி அபிஷேக்கின் தலைமையை ஏற்க முடி யாது” என்று அக்கட்சியின் மூத்த தலைவர்க ளே பகிரங்கமாகக் கொதித்தெழுந்து ரகசியக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அக்கட்சி யின் 120 சட்டமன்ற உறுப்பினர்களில் தற்போது வெறும் 14 முதல் 15 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே மம்தாவின் பக்கம் எஞ்சியிருப்பது அவருடைய அதிகாரச் சரிவை அப்பட்டமாக நிரூபிக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.