“மம்தா பானர்ஜி முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்பவர் அல்ல”
9 May 2026, 9:33 pm

“மம்தா பானர்ஜி முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்பவர் அல்ல”

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்பவர் அல்ல என எழுத்தாளர் ரக்சந்தா ஜலில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறு கையில்,“தேர்தல் முடிந்தவுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை “முஸ்லிம் திருப்திப்படுத்துபவர்” என்று பாஜகவினர் கூறுகின்றனர்.

இது அவர்க ளின் சொந்த விமர்சனம்.

ஆனால் இது மிகவும் தவறானது.

மம்தா பானர்ஜி முன்பு பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தார். இந்த கூட்டணியை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.

இது சாதாரணமாக மறக்கக்கூடியது அல்ல.

2002ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் கலவரத்தின் போது மம்தா பானர்ஜி கடைப்பிடித்த மவுனம் மிக மோசமானது ஆகும்.

அதனால் மம்தா பானர்ஜி முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்பவர் அல்ல என்பதே உண்மை” என அவர் கூறினார்.