கொல்கத்தா மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல்
9 Aug 2026, 10:46 pm
<p><strong>கொல்கத்தா மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல்</strong></p><p>மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ளது காளிசாகர். இங்கு ஞாயிற்றுக்கிழமை போலீஸ்காவலில் உயிரிழந்த, தனது கட்சித் தொண்டரின் குடும்பத்தினரைச் சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சென்றிருந்தார். அப்போது மர்மநபர்கள் அவரது வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு ‘சோர்’ (திருடன்) மற்றும் ‘தாகைத் ராணி’ (திருடர்களின் ராணி) என்று முழக்கங்களை எழுப்பியதோடு, காரின் மீது சேறு, செருப்புகள் மற்றும் கற்களை வீசியுள்ளனர். இதனால் காளிசாகர் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.</p><p>இதுதொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில்,”எனது கார் மீது கற்கள், காலணிகள் மற்றும் சேறு கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட சதியே தவிர வேறில்லை. நான் வருவதாகக் காவல்துறைக்கு முன்பே தெரிவித்திருந்தேன், இருப்பினும் எந்தப் பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் தலை துகள் களாக உடைக்கப்பட்டிருக்கலாம். நான் இங்கே இறந்திருக்கக் கூடும்” என பிரதமர் மோடி போன்று குற்றம்சாட்டினார்.</p>
