தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாமல்லபுரம் பேருந்து நிலையப் பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்

55 minutes before
மாமல்லபுரம் பேருந்து நிலையப் பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம் பேருந்து நிலையப் பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம், நவ. 22-உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த நவீன பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுளளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு முறையான பேருந்துநிலையம் இல்லாததால் தலசயன பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம்செயல்படுகிறது. இங்கு 8 பேருந்துகள் மட்டுமே நிறுத்தமுடியும் என்பதால், மற்ற பேருந்துகள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுக் கடும் போக்குவரத்து நெரிசல்ஏற்படுகிறது.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண 1992-ஆம் ஆண்டுகருக்காத்தம்மன் கோயிலுக்கும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் இடையே 6.79 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் 2006-2011 காலகட்டத்தில் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், ஆட்சி மாற்றம் மற்றும்பல்வேறு காரணங்களால் இப்பணி பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது. 2020-ஆம் ஆண்டு மண் சோதனை மேற்கொள்ளப்பட்டு உகந்த இடம் எனச்சான்றிதழ் பெறப்பட்ட பிறகும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, 2024பிப்ரவரி 27-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்நாட்டினார். மார்ச் 13-ஆம் தேதி தொடங்கிய கட்டுமானப் பணிகள், கடந்த 6 மாதங்களாக மந்தகதியில்நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறுத்தப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் நலன் கருதி,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு நிறுத்தப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்துப் பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.