தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மால்டா மாவட்டம்
3 Apr 2026, 5:05 pm
<p><strong>தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மால்டா மாவட்டம்</strong></p>
<p>கொல்கத்தா மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாச்சக் பிளாக்- 2 பகுதியில் நூற்றுக்கணக் கான வாக்குகள் எஸ்ஐஆர் (வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்) மூலம் நீக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, புதனன்று மாலை அரசு அலு வலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 3 பெண் அதிகாரிகள் உள்பட மொத்தம் 7 அதிகாரிகள் (அனைவரும் நீதித்துறை சார்பில் நியமிக்கப்பட்டவர்கள்) நள்ளிரவு வரை அலுவலகத்திலேயே சிக்கிக் கொண்டனர். வியாழனன்று அதிகாலை 2 மணியளவில் காவல்துறையினர், துணை ராணு வத்தினர் அதிகாரிகளை மீட்டனர். அதிகாரிக ளை மீட்கும் போது வன்முறை நிகழ்ந்தது. காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. பலர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த வன்முறை குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள் ளது. மால்டா சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது என்ஐஏ போன்ற மத்திய முகமையிடம் விசாரணையை ஒப்படைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டதை குறிப்பிட்டு, தேர்தல் ஆணையச் செயலாளர் சுஜீத் குமார் மித்ரா என்ஐஏ தலைமை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில்,”நீதிமன்ற உத்தரவின்படி இந்த விவகாரத்தில் தேவையான விசாரணையை மேற்கொண்டு, அதன் முதற்கட்ட அறிக் கையை நேரடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் முழுக் கட்டுப்பாட்டில் மால்டா மாவட்டம் சிக்கி யுள்ளது. </p>
