மாநிலங்களவை உறுப்பினராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு
29 Jun 2026, 11:33 pm
<p><strong>மாநிலங்களவை உறுப்பினராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு</strong></p><p>புதுதில்லி, ஜூன் 29 தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக இருந்த 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவ தற்கான தேர்தல் சமீபத்தில் நடை பெற்றது. இதில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்டார். அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவை உறுப்பின ராக திங்கட்கிழமை (ஜூன்29) பதவி யேற்றுக்கொண்டார். குடியரசுத் துணைத்தலைவர், மாநிலங்களவை தலைவருமான சி.பி.ராதாகிருஷ் ணன், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் சோனியா காந்தி, மக்களவை உறுப் பினர் பிரியங்கா காந்தி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.</p>
