திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் ஆவின் பாலகம்
13 May 2026, 11:03 pm
<p><strong>திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் ஆவின் பாலகம்</strong></p><p>நாமக்கல், மே 13- மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் 5 வரு டங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட ஆவின் பாலகம், பயன்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத் துள்ள மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர், ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் பாலகம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரையில், மின்சார இணைப்பு கொடுத்து பயன்பாட்டிற்கு வரவில்லை. குறிப்பாக, இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் சுற்றுவட்டார பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். ஆவின் பாலகம் பயன்பாட்டிற்கு வந்திருந்தால் அரசிற்க்கு லாபம் கிடைத்திருக்கும். கட்டி முடித்து பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்சமயம் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் உள்ளது. மேலும் பின்புறம் முட் புதர்கள் முளைத்துள்ளன. இரவு நேரங்களில் மது அருந்த இடமாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் ஆவின் பாலகத்தை பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
