தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநில அளவிலான போட்டியில் பதக்கம் கடலூரில் மல்லர்கம்ப வீரர்களுக்கு பாராட்டு

10 Mar 2026, 5:48 pm
மாநில அளவிலான போட்டியில் பதக்கம் கடலூரில் மல்லர்கம்ப வீரர்களுக்கு பாராட்டு
<p><strong>மாநில அளவிலான போட்டியில் பதக்கம் கடலூரில் மல்லர்கம்ப வீரர்களுக்கு பாராட்டு</strong></p> <p>கடலூர், மார்ச் 10 - தமிழ்நாடு மல்லர்கம்ப கழகம் மற்றும் திருச்சி மாவட்ட மல்லர்கம்ப கழகம் இணைந்து பொன்மலைபட்டியில் &nbsp;12-வது மாநில அளவிலான மல்லர்கம்ப போட்டி நடை பெற்றது. &nbsp;இதில் கடலூர் மாவட்ட மல்லர்கம்ப கழக அணி சார்பாக 40-க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் பங்குபெற்று &nbsp;குழுப்போட்டி யில் &nbsp;6 தங்க பதக்கம், 24 வெள்ளி பதக்கம், 5 வெண்கல பதக்கம் மற்றும் தனி நபர் பிரிவில் 2 வெள்ளி பதக்கம், 8 வெண்கல பதக்கங்களும் வென்று மாநில அளவில் &nbsp;3ம் இடம் பிடித்து சாதனைப் படைத்தனர். கடலூர் மாவட்ட மல்லர்கம்ப அணிக்கு &nbsp;பாராட்டு விழா அண்ணா விளையாட்டு அரங்கில் செவ்வாயன்று நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட மல்லர்கம்ப கழக தலைவர் &nbsp;ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். &nbsp;சிறப்பு விருந்தினராக &nbsp;தமிழ்நாடு &nbsp;விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், திரு வண்ணாமலை பிரிவு &nbsp;மண்டல முது நிலை மேலாளர் சி.சாந்தி, கடலூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அலுவலர் மகேஷ்குமார் கலந்துக் கொண்டனர். &nbsp; மல்லர் கம்ப கழக துணை தலைவர் அசோகன் , பொருளாளர் &nbsp;மணிபால் பொதுச்செயலாளர் கார்த்திக், துணை செயலாளர் பாபு &nbsp;ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். &nbsp; பயிற்சியாளர்கள் , கோபிநாத், புரு ஷோத்தமன் , கிரிஜா, பிரசாந்த், &nbsp;மற்றும் மேலாளர்கள் முஷாரப், ஹேமபிரியா கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.