தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுரங்கச் சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்த மாலி அரசு திட்டம்

12 Aug 2026, 9:13 pm
சுரங்கச் சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்த மாலி அரசு திட்டம்

சுரங்கச் சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்த மாலி அரசு திட்டம்

பமாகோ,ஆக.12-மாலி ராணுவ அரசு தன் நாட்டு சுரங்கங்களில் உள்ள தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்திவருகிறது. சுரங்கத் துறையில் அரசுக்குச் சொந்தமான பங்குகளின் அளவை அதிகரித்தும், காப்புரிமைத் தொகையை உயர்த்தியுள்ளது.

இதன் மூலமாக கிடைக்கும் உபரி வருவாயைப் பயன்படுத்தி, நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 880 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைத் திரட்ட மாலி அரசு திட்டமிட்டு வருகிறது.

கடந்த ஜூலை 31 அன்று நடைபெற்ற ‘ஆற்றல், நீர் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின்’ முதல் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் அலுசேனிசானோ, இந்த நிதியம் ஒவ்வொரு ஆண்டிற்கும் குறைந்தபட்சம் சுமார் 88 மில்லியன் டாலர்கள் ஈட்ட உள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிலையான வருவாயை வைத்து, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான பணத்தை திரட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.2023-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிதியம், சுரங்க நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகள் மூலம் நிதியளிக்கப்படுகிறது. இதில் 10 சதவிகிதம் மதிப்புக்கூட்டு வரியும், அனுமதி பெற்றமுதல் ஐந்து ஆண்டுகளுக்குக் காலாண்டு விற்றுமுதலில் 1%-மும், அதன் பிறகு 2%-மும் வசூலிக்கப்படுகிறது. அரசுசுரங்க வருவாயை நாட்டின் பொருளாதாரத்திற்குள் மீண்டும் முதலீடு செய்யும் பல வழிகளில் இந்தநிதியமும்ஒன்றாகும்.

2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுரங்கச் சீர்திருத்தங்கள் மூலமாக இந்த நிதியம்உருவாக்கப்பட்டது. இதன் மூலமாக அனைத்துப்புதிய சுரங்கத் திட்டங்களிலும் அரசுக்கு 10% பங்குகளை வழங்கியதுடன், வெளிநாட்டுச் சுரங்க நிறுவனங்கள் தங்களது பங்குகளின் மூலதனத்தில் (equity) 5%-ஐஅரசுக்குச் சொந்தமான இடைத்தரகர் அமைப்பு மூலம் மாலி நாட்டின் தனியார் முதலீட்டாளர்களுக்கு மாற்றவேண்டும் என்பதையும் கட்டாயமாக்கியது.

இதன் மூலம், நாட்டின் குறைந்தபட்சப் பங்கு - தனியார் மற்றும் பொதுத் துறை உட்பட - 15% ஆக உயர்ந்தது. மேலும் 20% பங்குகளை அரசு தனியாக வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டதால், நாட்டின் பங்கு 35% வரைஉயர வாய்ப்புள்ளது. 2024-ஆம் ஆண்டில் சுமார் 1.47 பில்லியன் டாலர்களை அரசு சுரங்கவருவாயாகத் திரட்டியது. இது சீர்திருத்தங்களுக்கு முந்தைய காலத்தை விட 52.5% அதிகமாகும். 2019 சுரங்க விதிமுறைகளின் கீழ் அரசின் அதிகபட்ச பங்கு 20% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், உள்ளூர் மாலி முதலீட்டாளர்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்பட்டிருக்கவில்லை.

கனடாவின் முன்னணி நிறுவனமான பாரிக் மைனிங் (Barrick Mining) உட்பட பல சுரங்க நிறுவனங்கள் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், அரசு இதில் எவ்வித விட்டுக்கொடுத்தலையும் செய்யவில்லை.அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எதிராகக் கைது பிடியாணை பிறப்பித்ததுடன், லூலோ-கவுன்கோட்டோ (Loulo-Gounkoto) சுரங்கத்தில் இருந்த தங்கம் முழுவதையும் பறிமுதல் செய்து, அதைத் தற்காலிகமாக அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.