உடல் நலக்குறைவால் ஆண் யானை உயிரிழப்பு
13 Feb 2026, 5:58 pm
<p><strong>உடல் நலக்குறைவால் ஆண் யானை உயிரிழப்பு</strong></p>
<p>உதகை, பிப்.13- முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில், உடல் நலக்குறைவுடன் சுற்றித்தி ரிந்த ஆண் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வாழைத்தோட்டம், மாவநல்லா, பொக்காபுரம் சுற்றுவட்டார பகு திகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக 50 வயது மதிக்கத்தக்க ‘ரிவால்டோ’ என்ற ஆண் யானை சுற்றி திரிந்து வந்தது. பொதுமக்களு டன் சகஜமாக பழகி வரும் இந்த யானை இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங் களிலேயே குடியிருப்பு பகுதிகளுக்குள் வரு வதை வழக்கமாக கொண்டிருந்தது. துதிக் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த யானை மற்ற காட்டு யானைகளை போல உணவு உட்கொள்ள முடியாமலும், சுவாசிக்க முடியாமலும் அவதியடைந்து வந்த நிலை யில், கடந்த மூன்று மாதங்களாக யானை எங்கு சென்றது என்பது தெரியாமல் வனத் துறையினர் தேடி வந்தனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ரிவால்டோ யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்தது. ஆனால், அதன் வயிற்றுப் பகுதியில் பெரிய கட்டி ஒன்று உருவாகியிருந்த நிலையில், வனத்துறையினர் அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சோர்வு டன் காணப்பட்ட நிலையில், மற்ற யானை கள் அந்த யானையை கடந்த வாரம் தந்தத் தால் குத்தியதில் உடல் மற்றும் வால் பகுதி களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு நடக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. வயது மூப்பு மற்றும் துதிக்கையில் ஏற்பட்ட காயம், சுவாசப் பிரச்சனை ஆகிய காரணங்க ளால் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளதால் வனத்துறையினர் அந்த யானைக்கு பழங்கள் மூலம் மருந்து, மாத்திரைகளை சாப்பிட வழங்கி கண்காணித்து வந்தனர். ஆனாலும், ரிவால்டோ யானை நடக்க முடியா மல் வாழைத்தோட்டம் கிராமத்தை ஒட்டிய பகுதியில் வெள்ளியன்று உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.</p>
