முந்தய பக்கம்

ஆண் யானையின் சடலம் கண்டெடுப்பு

23 Nov 2025, 6:20 pm
ஆண் யானையின் சடலம் கண்டெடுப்பு
<p><strong>ஆண் யானையின் சடலம் கண்டெடுப்பு</strong></p> <p>கோவை, நவ.23- தடாகம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரி ழந்த நிலையில் கண்டறியப்பட்ட சம்ப வம் குறித்து வனத்துறையினர் விசா ரித்து வருகின்றனர். கோவை மாவட்டம், தடாகம் வனச் சரகத்திற்குட்பட்ட நாத்துக்காடு காப்புக் காட்டிலிருந்து 25 மீட்டர் தொலைவில் &nbsp;உயிரிழந்த நிலையில் ஆண் யானை &nbsp;சடலம் கிடப்பதாக வனத்துறையின ருக்கு சனியன்று தகவல் கிடைத்தது. மாலை நேரமாக இருந்ததால் பிரேத &nbsp;பரிசோதனைக்கு போதிய வெளிச்சம் &nbsp;இல்லாத காரணத்தால், ஞாயிறன்று &nbsp;வன அலுவலர்கள், வருவாய்த்துறை &nbsp;அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் &nbsp;மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தன் னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த &nbsp;பின்னரே உறுதியாகத் தெரியவரும் என &nbsp;வனத்துறையினர் கூறினர். கடந்த சில மாதங்களாக கோவை வனப்பகுதியில் யானைகள் இயற்கைக்கு மாறாக இறக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடை பெற்று வருவது சோகத்தை ஏற்படுத் தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வனத் துறை உயரதிகாரிகள் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram