பாலியல் குற்றச்சாட்டில் மாலத்தீவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கைது!
9 hours before
<p>மாலத்தீவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் (64), சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மாலத்தீவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் மாலத்தீவின் முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். அக்கட்சியின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். 2026 ஆகஸ்ட் மாதம் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய அவர், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாலத்தீவு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சியின் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கத் தயாராகி வந்தார். இவர், 2021-இல் ஐ.நா பொதுச் சபையின் தலைவராக பதவி வகித்தவர்.</p><p>இந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
