முந்தய பக்கம்

10 ஆண்டு மட்டுமே பிரதமர் பதவி: மலேசியாவில் சட்டத் திருத்தம்

24 Feb 2026, 3:55 pm
10 ஆண்டு மட்டுமே பிரதமர் பதவி: மலேசியாவில் சட்டத் திருத்தம்
<p><strong>10 ஆண்டு மட்டுமே பிரதமர் பதவி: மலேசியாவில் சட்டத் திருத்தம்</strong></p> <p>கோலாலம்பூர்,பிப்.24- மலேசியப் பிரதமரின் அதிகாரக் குவிப்பை தடுத்து, கட்டுப்படுத்தவும், பொறுப்புக்கூறலை அதிகரிக்க வும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பிரதமர் பதவியில் நீடிக்க முடியும் என்ற புதிய சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு &nbsp;அறிமுகப்படுத்தியுள்ளது. &nbsp; அதாவது ஒருவர் அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவியில் &nbsp;இருக்க முடியும். தற்போது அந்நாட்டில் &nbsp;பிரதமர் பதவிக்கு கால வரம்பு ஏதும் இல்லை. இதன் காரணமா கவே, முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது 1981 -2003 வரையும், பின் 2018-2020 வரை என மொத்தம் 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். &nbsp;தற்போதைய பிரதமர் அன்வர் இப்ராகிம், ஊழலை ஒழிக்கவும் நிர்வாகத்தைச் சீரமைக்கவும் கடந்த ஜனவரி மாதம் இந்த மாற்றத்தை அறிவித்தார். 2022 பொதுத்தேர்தலின் போது அவரது &lsquo;பகத்தான் ஹரப்பான்&rsquo; (PH) கூட்டணி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். தனக்கே பொருந்தும் &nbsp;இதுகுறித்து பேசிய அன்வர் ஒருவர் 10 ஆண்டுகள் (இரண்டு பதவிக்காலங்கள்) பதவியில் இருப்பது ஒரு திறமையான நிர்வாகத்திற்குப் போதுமானது என்றார். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், இது முதலில் தனக்கே பொருந்தும் என்றும் அவர் கடந்த வாரம் &nbsp;தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சீர்திருத்தங்கள் மெதுவாக நடப்பதாக எழுந்த விமர்சனங்களை &nbsp;தொடர்ந்து, நகர்ப்புற வாக்காளர்களைக் கவரும் வகையிலான நகர்வாக &nbsp;இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram