அமித் ஷாவை விமர்சித்து செய்தி வெளியிட்டதற்காக மக்தூப் மீடியா மீது வழக்கு மேற்குவங்க அரசுக்கு சர்வதேச பத்திரிகையாளர் நிறுவனம் கடும் கண்டனம்
30 Oct 2026, 9:25 pm

அமித் ஷாவை விமர்சித்து செய்தி வெளியிட்டதற்காக மக்தூப் மீடியா மீது வழக்கு மேற்குவங்க அரசுக்கு சர்வதேச பத்திரிகையாளர் நிறுவனம் கடும் கண்டனம்

புதுதில்லிமேற்கு வங்கத்தில்2 பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராகச் சுவேந்து அதிகாரி உள்ளார்.

அம்மாநிலத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மஹுவா மொய்த்ரா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து ‘மக்தூப் மீடியா’ (Maktoob Media) என்ற சுதந்திரமான ஊடகம் செய்தி

தொகுப்பை வெளியிட்டது. உடனே மேற்குவங்க அரசு ‘மக்தூப் மீடியா’ மீது வழக்கு தொடுத்து, சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், ‘மக்தூப் மீடியா’ மீதான எப்ஐஆரை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சர்வதேச பத்திரிகை யாளர் நிறுவனம் (International Press Institute - IPI) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்கக் காவல் தலைமை இயக்குநருக்கு அந்நிறுவனம்எழுதியுள்ள கடிதத்தில், “மஹுவா மொய்த்ராவின் கூற்றைச் செய்தியாக வெளியிட்டதற்காக மக்தூப் மீடியா மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பிலுள்ள மக்கள் பிரதிநிதி ஒருவர் கூறிய தீவிரமான குற்றச்சாட்டுகுறித்து மக்தூப் மீடியா செய்தி வெளியிட்டது குற்றமல்ல. பொதுநலன் சார்ந்த விஷயங்களில் செய்தி வெளியிடுவதே சுதந்திரமான பத்திரிகைத் துறையின்கடமையாகும். ஆனால் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்திருப்பது, பொதுநலன் சார்ந்த பத்திரிகைத்தொழிலைத் தண்டிக்கும் ஒரு முயற்சியாகும். அதனால் உடனடியாக எப்ஐஆரைத் திரும்பப் பெற வேண்டும்.

வங்கிக் கணக்குகுறிப்பாக இந்த வழக்கு வெளிச்சத் திற்கு வந்த விதம் கவலையளிப்பதாக உள்ளது. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறித்து காவல்துறை மக்தூப் நிறுவனத்திற்கு நேரடியாகத் தெரிவிக்கவில்லை. மாறாக, மக்தூப்பின் சமூகவலைதளம் மற்றும் வங்கிக் கணக்கு (?)விவரங்களை மேற்குவங்கக் காவல்துறை கோரிய பின்பே, மக்தூப் ஊடகம் இந்த வழக்கைப் பற்றிஅறிந்துகொண்டது. இது மோசமானது. விசாரணை என்ற பெயரில் மக்தூப்பின் ஊடகச் சுதந்திரத்திற்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் இந்த விவ காரத்தைத் தொடர்ந்துஉன்னிப்பாகக் கவனித்துவரும் வேளையில், மக்தூப்பில் உள்ள பத்திரிகையாளர்களுடன் உறுதியாகத் துணைநிற்கிறோம்” என அக்கடி தத்தில் கூறப்பட்டுள்ளது.