ரூ. 1000 ஊதிய உயர்வு, 8 நிலுவைத் தொகைக்கு அரசாணை ‘மக்களைத் தேடி’ மருத்துவத் திட்ட ஊழியர்களின் போராட்டம் வெற்றி!
4 Oct 2026, 12:13 am

ரூ. 1000 ஊதிய உயர்வு, 8 நிலுவைத் தொகைக்கு அரசாணை ‘மக்களைத் தேடி’ மருத்துவத் திட்ட ஊழியர்களின் போராட்டம் வெற்றி!

சென்னை, அக். 3 -‘மக்களைத் தேடி’ மருத்துவத் திட்ட ஊழி

யர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊதிய உயர்வும், 8 மாதத்திற்கான ரூ. 8,000 நிலுவைத் தொகையும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இது கடந்த 3 ஆண்டுகளாக திட்டஊழியர்கள் சங்கம் நடத்திய தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று சிஐடியு கூறியுள்ளது.மக்களைத் தேடி மருத்துவத் திட்ட ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாநிலத் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் எஸ். மகாலட்சுமி ஆகியோர்இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

“தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் 32 மாவட்டங்களில் செயல்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 8,713 எச்எஸ்சி (HSC) ஊழியர்களும், 8,675 டபிள்யுஎச்வி (WHV) ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.5,500 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. 2 மணி நேரப்பணியாகக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நாள்தோறும் 8

மணி நேரம் வரை ஊழியர்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டதுடன், உபகரணங்கள், எழுதுபொருள்கள், மொபைல் போன், டேட்டா என்ட்ரி உள்ளிட்டசெலவுகளையும் ஊழியர்களே ஏற்க வேண்டியிருந்தது.

இதுதொடர்பாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், அமைச்சர், முதன்மைச் செயலாளர், NHM, DPH, TNCDW இயக்குநர்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. திண்டுக்கல் எம்.பி. ஆர். சச்சிதானந்தம் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கூடுதல் நிதி கோரியதுடன், எம்.எல்.ஏ. ஆர். செல்லசுவாமியும் சட்டப்பேரவையில் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.இந்நிலையில், 2026 ஏப்ரல் முதல் மாதம் ரூ.1,000 உயர்வும், 8 மாதநிலுவையாக ரூ.8,000 வழங்கவும் செப்.25 அன்று NHM இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ. 6.86 கோடிநிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், இந்த அரசாணையை சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு வரவேற்பதுடன், போராட்டங்களில் பங்கேற்ற ஊழியர்கள், ஆதரவளித்த சிஐடியு நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரம் பணி நிரந்தரம் உள்ளிட்ட இதர கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராடவும் முடிவு செய்துள்ளது” என்று அறிக்கையில் அவர்கள்குறிப்பிட்டுள்ளனர்.