தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிஐடியு கோரிக்கை வெற்றி ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியர்களின் ஊதிய நிலுவைக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு!

11 Jun 2026, 9:08 pm
சிஐடியு கோரிக்கை வெற்றி ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியர்களின் ஊதிய நிலுவைக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு!

சிஐடியு கோரிக்கை வெற்றி ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியர்களின் ஊதிய நிலுவைக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு!

கோயம்புத்தூர், ஜூன் 11 - தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பணி யாற்றி வரும் 13 ஆயிரத்து 225 (WHV) ஊழியர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படாமல் இருந்த ஊதிய நிலுவைத்தொகை தற்போது முழுமையாக விடுவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து சிஐடியு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது: ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வரும் 13 ஆயிரத்து 225 பெண் சுகாதாரத் தன்னார்வலர் களுக்கு (WHV) கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படா மல் இருந்தது.

இதனால் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.

இந்த ஊதியப் பிரச்சனை தொடர் பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜை, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செய லாளர் எஸ். மகாலட்சுமி, துணைச்செய லாளர் என். ரேவதி உள்ளிட்ட நிர்வாகி கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) அன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துப் பேசினோம்.

ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர், உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப் படும் என்று உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து திங்கட் கிழமை அன்று ரூபாய் 5.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தர விடப்பட்டுள்ளது.

அதற்கான அரசு அரசாணையும் உடனடியாக வெளி யிடப்பட்டுள்ளது.

சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட அமைச்சர்க்கு, ஊழியர்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.