தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

5 ஆண்டுகளாக ரூ.5,500 ஊக்கத்தொகை; 3 மாதங்களாக அதுவும் வழங்கப்படவில்லை

yesterday
5 ஆண்டுகளாக ரூ.5,500 ஊக்கத்தொகை; 3 மாதங்களாக அதுவும் வழங்கப்படவில்லை
<p><strong>5 ஆண்டுகளாக ரூ.5,500 ஊக்கத்தொகை; 3 மாதங்களாக அதுவும் வழங்கப்படவில்லை</strong></p><p>சிவகங்கை, ஜூன் 22- சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் பணி யாற்றும் ஊழியர்கள், தங்க ளது பணிச்சுமை, ஊதியம் மற்றும் பணிநிலைகள் தொடர் பாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் கூறுகையில், திட்டத்தில் பணியில் சேர்ந்த போது நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பணி யாற்ற வேண்டும் என தெரி விக்கப்பட்டதாகவும், தற்போது 8 மணி நேரத்திற்கும் மேலாக களப்பணிகளில் ஈடுபட வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். வீடு வீடாகச் சென்று பொது மக்களின் உடல்நிலையை கண்காணித்தல், ரத்த அழுத் தம் மற்றும் சர்க்கரை அளவை பரிசோதித்தல், மருத்துவத் தக வல்களை பதிவு செய்தல் உள் ளிட்ட பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர்கள் கூறினர். மேலும், கடந்த 5 ஆண்டு களாக மாதம் ரூ.5,500 மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அந்த தொகை போதுமானதாக இல்லை என் றும் வேதனை தெரிவித்தனர். பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில் ஊதியத்தில் எந்த உயர்வும் வழங்கப்படாதது ஏமாற்றமளிப்பதாகவும் குறிப்பிட்டனர். அதோடு, மாதந்தோறும் ஊக்கத்தொகை முறையாக வழங்கப்படுவதில்லை என் றும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பிறகே சம்பளம் கிடைக்கும் சூழல் நிலவுவதாக வும் குற்றம்சாட்டினர். குறிப் பாக கடந்த 3 மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படா ததால் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தனர். எனவே, மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் பணி யாற்றும் அனைத்து ஊழி யர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாதாந்திர ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும், நிலுவை யில் உள்ள மூன்று மாத ஊக்கத்தொகையை உடனடி யாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வா கத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாக மும் சுகாதாரத் துறை அதி காரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழி யர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.