முந்தய பக்கம்

மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

10 Jul 2026, 9:26 pm
மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூலை 10- குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சிஐ டியு மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தில் பணிபுரிகின்ற பெண் தன்னார்வலர்கள், வீடு வீடாக சென்று மருத்துவ சேவை செய்து வருகின்றனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட வர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வரக்கூடிய ஊழியர்களை, தொழிலாளர்க ளாக அங்கீகரித்து, சட்டப்படியான உரிமை களை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதி யமாக மாதம் ரூ.15 ஆயிரம் மற்றும் கைபேசி, ரீசார்ஜ், சீருடை, அடையாள அட்டை, பய ணப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலை வர் எம்.திலகவதி தலைமை வகித்தார். சிஐ டியு மாநில துணைத்தலைவர் சி.நாகரா சன், மாவட்டத் தலைவர் சி.கலாவதி, மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம்மாள், உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட அமைப்பாளர் சி.கவிதா ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இதில், சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ்.திலகவதி, மாவட்டப் பொருளாளர் ஏ.பழனியம்மாள், நிர்வாகிகள் ஆர்.கோகிலா, ஜே.பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram