மக்களை தேடி மருத்துவத் திட்ட ஊழியர்கள் ஆர்.செல்லசுவாமி எம் எல் ஏ விடம் மனு
28 May 2026, 11:46 pm
<p><strong>மக்களை தேடி மருத்துவத் திட்ட ஊழியர்கள் ஆர்.செல்லசுவாமி எம் எல் ஏ விடம் மனு</strong></p><p>நாகர்கோவில்ஃமே.28- அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் ஆர் செல்வ சுவாமி எம் எல் ஏ விடம் மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் சங்கம் (சி ஐ டி யு) சார்பில் மனு கொடுத்தது.. சி ஐ டி யு குமரி மாவட்ட பொருளாளர் இந்திரா தலைமையில் சங்கத் தலைவர் கே..விக்னேஸ்வரி ,மாவட்ட செயலாளர் எஸ். தமிழ் செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள். எங்களின் பணிச்சுமை, ஊக்கத்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். எங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 5500 ஊக்கத்தொகையில் இருந்து நோட்டு, பேனா, பெட்ரோல் செலவு, பஸ் செலவு, மொபைல் ரீசார்ஜ், டேட்டா செலவு உள்ளிட்ட அனைத்தையும் சொந்த செலவில் செய்து வருகிறோம். ஏப்ரல் மாத ஊக்கத்தொகை மே மாதத்தில் வழங்கப்படவில்லை. தற்போது இரண்டு மாத ஊக்கத்தொகை நிலுவையில் உள்ளது. நிதி இல்லை என்ற காரணத்தால் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. எனவே, எங்களுக்கான நிதியை நிரந்தரமாக ஒதுக்கி, அந்தந்த மாதத்தில் ஊக்கத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்கு ஊதியம் அல்ல, வெறும் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தொகையிலும் பல்வேறு பணிச்செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆரம்பத்தில் இந்த வேலைக்கு எங்களை தேர்வு செய்தபோது, “ஒரு நாளுக்கு 20 வீடுகள் / 20 நபர்களுக்கு ஸ்கிரீனிங் மட்டும் செய்தால் போதும்” என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தொடர்ந்து பணிச்சுமை அதிகரித்து வருகிறது. முதலில் லாகின் மற்றும் பாலோ அப் மட்டும் இருந்த நிலையில், தற்போது தினசரி பதிவு ஆன்லைன் என்ட்ரி உள்ளிட்ட புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் டேட்டா பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஒரு மணி நேரம் பயன்பாட்டிற்கே சுமார் 1 ஜிபி டேட்டா செலவாகிறது. அதற்கான தொகையை நாங்களே செலவு செய்து வருகிறோம். தினசரி ஆன்லைன் என்ட்ரி செய்ய வேண்டியிருப்பதால், டேட்டா கார்டு அல்லது மாதாந்திர இணையச் செலவுத்தொகை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தினசரி பணிக்காக பயன்படுத்தப்படும் ஸ்கிரீனிங் மற்றும் பாலோ அப் தொடர்பான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் தேவையான பதிவேடுகளை அரசு மூலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தினசரி ஆன்லைன் பதிவு செய்ய வேண்டியிருப்பதால், அதற்கான டேட்டா கார்டு அல்லது இணையச் செலவுத் தொகை வழங்கப்பட்டால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவ டிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக் ்கொள்கிறோம். என தெரிவித்திருந்தனர்.</p>
