தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சரிடம் சிஐடியு மனு

8 Jun 2026, 10:56 pm
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சரிடம் சிஐடியு மனு
<p><strong>மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சரிடம் சிஐடியு மனு</strong></p><p> திருப்பூர்/கோவை, ஜூன் 8- மக்களைத் தேடி மருத்துவத் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜிடம் சிஐ டியுவினர் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும், அதேபோன்று திங்க ளன்று மேட்டுப்பாளையத்திலும், ஆய்விற்கு வந்த அமைச்சரி டம், சிஐடியு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.5,500 கடந்த இரண்டு மாதங்க ளாக வழங்கப்படவில்லை; அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், 6 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கால முறை ஊதிய அடிப்படையில் மாத ஊதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்த வேண்டும். சம வேலைக்குச் சம ஊதியம், மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளதாகவும், மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அருண்ராஜ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.