தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரும் மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள்

8 Jul 2026, 1:28 am
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரும்  மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள்
<p><strong>ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரும் மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள்</strong></p><p>கடலூர், ஜூலை 7- தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை யின் கீழ் பணியாற்றும் &#39;மக்களைத் தேடி மருத்துவம்&#39; ஊழியர்களுக்கு, காலத்திற்கேற்ற ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 13,225 ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக மாதம் வெறும் ரூ.5,500 என்ற மிகக்குறைந்த ஊக்க ஊதியத்தில் பணியாற்றி வரு கின்றனர். விலைவாசி உயர்ந்துள்ள சூழலில், இவ்வளவு குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்துவது பெரும் சவாலாக உள்ளது என்று ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசுத் திட்டங்களின் முதுகெலும்பு டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய் தடுப்பு, காசநோய் கண்காணிப்பு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை கள் நலப் பணிகள் என, அரசின் பல்வேறு சுகாதாரத் திட்டங்களை அடித்தட்டு மக்க ளிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த ஊழியர்கள் முக்கியப் பங்காற்றி வரு கின்றனர். இத்தகைய அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டு வரும் தங்க ளுக்கு, உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் ஊழியர்களிடையே நீடிக்கிறது. முக்கிய கோரிக்கைகள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. மாத ஊக்க ஊதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்த வேண்டும். பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான இதர நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இந்த மனுவை, தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சங்கத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் மகாலட்சுமி, சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி. பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் வழங்கினர். அரசின் மக்கள் நலத் திட்டங்களைச் சுமக்கும் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.