முந்தய பக்கம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

14 Jul 2026, 10:41 pm
பணி நிரந்தரம் செய்யக் கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
<p><strong>பணி நிரந்தரம் செய்யக் கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>நாமக்கல், ஜூலை 14- பணி நிரந்தரம் செய்யக் கோரி நாமக்கல் லில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு கூட்டம் நாமக்கல் சிஐடியு அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்றது. மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாநிலத் தலை வர் கிருஷ்ணமூர்த்தி கூட்டத் திற்கு தலைமை தாங்கினார். நாமக்கல் சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி வாழ்த்திப் பேசினார். சிஐ டியு மாநில பொதுச் செயலா ளர் எஸ்.கண்ணன் பங் கேற்று சிறப்புரையாற்றி னார். இக்கூட்டத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில், மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் எஸ்.மகாலட்சுமி, மாநிலப் பொரு ளாளர் சாய் சித்ரா மற்றும் மாநில நிர்வாகி கள் திரளாக கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram