முந்தய பக்கம்

மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் சங்க பேரவை

4 Jul 2026, 9:36 pm
மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் சங்க பேரவை
<p><strong>மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் சங்க பேரவை</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை 4- இராமநாதபுரம் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்ட பேரவை எஸ்.மணி மேகலை தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் எஸ். மகாலட்சுமி துவக்க உரை யாற்றினார். சிஐடியு மாவட் டச் செயலாளர் எஸ்.ஏ. சந்தானம், மாநில பொருளா ளர் சாய்சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி நிறைவுரை யாற்றினார். மாவட்டத் தலைவராக எம்.ராதா, செயலாளராக ஜி. நவநீதா, பொருளாளராக எஸ். மணிமேகலை, துணைத் தலைவர்களாக லல்லி பாக் கியம், பரமேஸ்வரி, சண் முகப்பிரியா, துணைச் செய லாளர்களாக முத்துச் செல்வி, ராஜேஸ்வரி, தமிழ ரசி ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram