தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்க! பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம் போராட்டம்
2 Feb 2026, 3:32 pm
<p><strong>தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்க! பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம் போராட்டம்</strong></p>
<p>தேனி, பிப்.2 - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தொழிலாளர் துறையின் மூலமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டதின் விளைவாக, தொழிலாளர் துறை, ஆலையை ஆய்வு செய்து தொழிலாளர்கள் வேலை பார்த்த நாட்களில், அடிப்படையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பாக 205 தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதற்கு பின்னால் இரண்டு ஆண்டுகள் பணி முடித்த 58 தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், அண்ணா மில் நிர்வாகம் தொழிலாளர் துறை உத்தரவு ஏற்புடையதாக இல்லை எனக் கூறி உயர் நீதிமன்றம் சென்றது. அண்ணா கூட்டுறவு நூற்பாலை நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்ட உயர்நீதிமன்றம் தொழிலாளர் துறை உத்தரவு, சட்டப்படிதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை அமலாக்க வேண்டும் எனக் கூறிய நிலையில் உத்தரவுக்கு தடையாணை பெற்றுள்ளது. நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும் - தமிழக முதலமைச்சரிடமும் விண்ணப்பத்தின் மூலமாக முறையிட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்பதாக பதில் சொல்லப்பட்டது. தொழிலாளர் துறை உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்றது நிர்வாகம்தான்; தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விடியல் வர வேண்டும். தமிழ்நாடு அரசு நிர்வாகம் கொடுத்துள்ள வழக்கை வாபஸ் பெற செய்து, தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி பிப்.2 அன்று க.விலக்கிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தேனி அண்ணா நூற்பாலை முன்பு மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஜெயபாண்டி, மாவட்டச் செயலாளர் ஜி.சண்முகம், உதவித் தலைவர் டி..வெங்கடேசன், பஞ்சாலை சம்மேளன பொதுச் செயலாளர் எம்.அசோகன், மாநில பொருளாளர் எஸ்.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு உரிய தலையீடு செய்ய வேண்டும். தொழிலாளர் களுக்கு நியாயம் வழங்க வேண்டும் வலியுறுத்தினர்.</p>
