தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதிமன்ற தீர்ப்புப்படி பணி நிரந்தரம் செய்க! குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் போராட்டம்

29 Jan 2026, 3:04 pm
நீதிமன்ற தீர்ப்புப்படி பணி நிரந்தரம் செய்க! குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் போராட்டம்
<p><strong>நீதிமன்ற தீர்ப்புப்படி பணி நிரந்தரம் செய்க! குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் போராட்டம்</strong></p> <p>சென்னை, ஜன. 29 - நீதிமன்றத் தீர்ப்புப்படி பணி &nbsp;நிரந்தரம் செய்யக்கோரி, வியாழ னன்று (ஜன.29) வாரிய அலுவலகம் முன்பு குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். &ldquo;தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நீதிமன்ற தீர்ப்பின்படி நிரந்தரம் செய்ய வேண்டும்; உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி ஊதியத்தை நிர்ண யிக்க வேண்டும்; குழுக்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; வங்கி மூலம் ஊதியம் தர வேண்டும்; வாரிய ஆணை பிபி-505ஐ அனை வருக்கும் அமல்படுத்த வேண்டும்&rdquo; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த தர்ணா நடைபெற்றது. இந்த தர்ணாவை தொடங்கி வைத்து, சிஐடியு மாநிலப் பொருளாளர் எஸ். ராஜேந்திரன் உரையாற்றினார். அப்போது, &ldquo;தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்&rdquo; என்று வலியுறுத்தியதுடன், &ldquo;பணி நிரந்தரம் செய்ய வாய்ப் பிருந்தும் மறுப்பது ஏன்?&rdquo; என கேள்வி எழுப்பினார். &ldquo;நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை 13 ஆயிரத்து 500 ரூபாயாக குறைத்துள் ளதை சரி செய்ய வேண்டும்&rdquo; என்றார். குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் மா. ஆத்மநாதன், சிஐடியு மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வி. குமார், துணைத் தலைவர் எம். சிவாஜி, நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ஆர். சிவபெரு மாள், பொருளாளர் பி. குணசேகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் சிறப்புரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.